தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-தொகுப்புரை

  • 6.7 தொகுப்புரை

    சங்க காலத்தில் மன்னராட்சி அதாவது முடியாட்சிதான் நடைபெற்று வந்தது என்று படித்து உணர்ந்திருப்பீர்கள்.

    அரச பதவியானது வாழையடி வாழையாக வந்தது என்பது பற்றியும் அறிந்திருப்பீர்கள்.

    சங்ககால மக்கள் பொருளாதார நிலையில் மேம்பட்டு விளங்கினர் என்பது பற்றி விளக்கமாகப் படித்துணர்ந்தீர்கள்.

    சங்க காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை பல பிரிவாகப் பிரிக்கப்பட்டுச் சான்றுகளுடன் விளக்கப்பட்டதை நன்கு படித்துப் புரிந்து கொண்டீர்கள்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    சங்க காலத்தில் முக்கியத் தொழிலாக இருந்தது எது?
    2.
    என்னென்ன தொழில்கள் சங்க காலத்தில் நடந்தன?
    3.
    சங்க காலத்தில் நூல் நூற்ற பெண்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
    4.
    மீன்களை எம்முறைப்படி விற்றனர்?
    5.
    யார் யார் தமிழகத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர்?
    6.
    தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களில் ஏதேனும் மூன்றினைக் கூறுக.
    7.
    பழந்தமிழர் உட்கொண்ட சில உணவுப் பொருள்களைக் கூறுக.
    8.
    கள்ளுண்ணும் பழக்கமும், ஊன் உண்ணும் பழக்கமும் சங்க காலத்தில் இருந்ததா?
    9.
    கல்வி நிலை சங்க காலத்தில் எவ்வாறு இருந்தது?
    10.
    எத்தனை வகையான கூத்துகள் சங்க காலத்தில் இருந்தன?
புதுப்பிக்கபட்ட நாள் : 25-07-2017 11:08:22(இந்திய நேரம்)