தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-பிற்காலச் சோழர் ஆட்சி

 • பாடம் - 6

  A03126 பிற்காலச் சோழர் ஆட்சி

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

   

  சோழப் பேரரசின் நிருவாக முறை, சமுதாய நிலை, பொருளாதார நிலை ஆகியவற்றை விளக்குகின்றது. சோழப் பேரரசர் காலத்து இலக்கிய வளர்ச்சி, கலை வளர்ச்சி, சமய நிலை ஆகியவற்றை விளக்குகின்றது. மேலும் சோழப் பேரரசு எவ்வாறு வீழ்ச்சியடைந்தது என்பது பற்றியும் விளக்குகிறது.

   

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • சோழப் பேரரசின் நிருவாக முறை எதன் அடிப்படையில் அமைந்திருந்தது என்பது பற்றியும், நிருவாகத்தில் மன்னன் செயல்பாடுகள் யாவை என்பது பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
  • மத்திய அரசு, ஊராட்சி போன்ற அமைப்புகள் என்னென்ன செய்தன என்பது பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
  • நாட்டுப் பிரிவுகள் பற்றியும், குடவோலை முறை என்ற வாக்கு எடுப்பு முறை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
  • நாட்டின் வருவாய் எவற்றின் மூலம் பெறப்பட்டது, நாட்டில் என்னென்ன படைகள் இருந்தன, நீதிமன்றங்கள் யார் கண்காணிப்பில் இருந்தன என்பன போன்ற செய்திகளைப் பற்றி அறியலாம்.
  • சமுதாயத்தில் மக்களிடையே என்னென்ன பிரிவுகள், ஏற்றத்தாழ்வுகள் இருந்தன என்பதையும், மகளிரின் நிலை என்ன என்பதையும் பற்றிப் படித்து உணரலாம்.
  • சோழப் பேரரசு எதனால் வீழ்ச்சியடைந்து மறைந்து போனது என்பதைச் சான்றுகளுடன் அறிந்துகொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:34:50(இந்திய நேரம்)