Primary tabs
-
பாடம் - 3
A03123 பல்லவர் ஆட்சி
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நல்லாட்சி புரிந்தது போன்று பல்லவர்களும் நல்லாட்சி புரிந்தனர் என்பதை விளக்குகிறது.
பல்லவர் காலத்தில் பொருளாதார நிலை நன்கு மேம்பட்டுக் காணப்பட்டது என்பதையும், பல்லவ மன்னர்கள் நல்லதொரு கலைத் தொண்டு புரிந்துள்ளனர் என்பதையும், பக்தி இயக்கம் தோன்றி அதன் வாயிலாகப் பல இலக்கியங்கள் தோன்றின என்பதையும் தெளிவாக விளக்குகின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- இப்பாடத்தின் வாயிலாகப் பல்லவ மன்னர்கள் நல்லதொரு நிருவாகத்தை வைத்திருந்தனர் என்றும், அது பல உட்பிரிவுகளைக் கொண்டு நன்கு செயல்பட்டு வந்தது என்றும் படித்து உணரலாம்.
- சமுதாய நிலையைப் பொறுத்தவரையில் பல்லவ மன்னர்களின் ஆட்சியில் பல சாதிப் பிரிவுகள் இருந்தது பற்றிப் படித்துணரமுடியும்.
- பல்லவ மன்னர்களின் ஆட்சியில் பொருளாதார நிலை மேம்பட்டுக் காணப்பட்டது. விவசாயம் பெருகி வளர்ந்தது. பல தொழில்கள் நடைபெற்று வந்தன. அயல்நாட்டு வாணிபம் சிறந்த முறையில் அமைந்திருந்தது. இவற்றையெல்லாம் அறிந்து கொள்ளலாம்.
- பல்லவ மன்னர்கள் தமிழகத்தைக் கலைக்கோயிலாக மாற்றிச் சென்றனர் என்பது பற்றியும், கட்டடக் கலை, ஓவியக் கலை, இசைக் கலை, நடனக் கலை போன்ற பல்வேறு கலைத் துறைகளில் எண்ணத்தைச் செலுத்தினர் என்பது பற்றியும் அறிய முடிகிறது.
- பல்லவர் காலத்தில் சமய நிலை நன்கு வளர்ச்சியுற்றிருந்தது பற்றியும் படித்துணர முடிகிறது.