தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-- பிற்காலச் சோழர்

 • பாடம் - 5

  A03125 பிற்காலச் சோழர்

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  பிற்காலச் சோழர் என்பவர்கள் யார்? எப்போது அவர்கள் தமிழகத்தில் தங்களது ஆட்சியை நிறுவினர்? என்பன பற்றி விளக்குகிறது.

  பிற்காலச் சோழ மன்னர்கள் இரு பரம்பரையாகப் பிரிந்து தமிழகத்தை ஆண்டு வந்தனர் என்பதை விளக்கிக் காட்டுகிறது.

  பிற்காலச் சோழர் பெரும்பேரரசராய் விளங்கியதையும், அவர்கள் சோழ நாட்டை விரிவுபடுத்தப் பல நாடுகளோடு போர்கள் செய்து வெற்றி கொண்டதையும் விளக்குகிறது.

   

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • விசயாலயன் என்னும் சோழனே முதன்முதலில் பிற்காலச் சோழப் பேரரசைத் தொடங்கிவைத்தவன் என்ற செய்தியை அறிந்துகொள்ளலாம்.
  • விசயாலயனைத் தொடர்ந்து சோழப் பேரரசைப் பல்வேறு சோழ மன்னர்கள் விரிவுபடுத்தினர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
  • பிற்காலச் சோழ மன்னர்கள் விசயாலயன் பரம்பரை வழி வந்தவர்கள், முதலாம் குலோத்துங்கன் பரம்பரை வழி வந்தவர்கள் என்னும் இரு பிரிவுகளாகப் பிரிந்து அமைந்துள்ளதை விளங்கிக்கொள்ளலாம்.
  • பிற்காலச் சோழ மன்னர்கள் பாண்டியர், சேரர், இலங்கையர், இராஷ்டிரகூடர், மேலைச் சாளுக்கியர் போன்றோருடன் தொடர்ந்து போர் புரிந்து வந்தனர் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
  • பிற்காலச் சோழ மன்னர்கள் கடல் கடந்த ஈழம், மாலத்தீவுகள், கடாரம் (சுமத்ரா) போன்ற நாடுகளுடன் போரிட்டு வெற்றி பெற்றனர் என்பதை அறிந்துகொள்ளலாம்.
  • பிற்காலச் சோழ மன்னர்கள் சைவ சமயத்தைத் தழுவியவர்களாக இருந்தாலும் சமயப்பொறையுடன் விளங்கினர் என்பதை அறிந்துகொள்ளலாம். ஒரே ஒரு மன்னன் மட்டும் வைணவர்களுடன் பகைமையை வளர்த்துக்கொண்டான் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:33:18(இந்திய நேரம்)