Primary tabs
-
5.3 பிற்காலச் சோழப் பேரரசில் இருபரம்பரை
பிற்காலச் சோழ மன்னர்கள் சோழ நாட்டை நானூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்துள்ளனர். இவர்கள் இருவேறு பரம்பரை வழிவந்து ஆட்சி புரிந்தவர்கள் ஆவர். சோழப் பேரரசினைத் தொடக்கி வைத்த விசயாலயன் பரம்பரையினர் கி.பி. 850 முதல் 1070 வரை ஆண்டுள்ளனர். அதன் பின்பு தந்தை வழியில் சாளுக்கிய மரபையும், தாய் வழியில் சோழ மரபையும் சார்ந்த முதலாம் குலோத்துங்கன் பரம்பரையினர் கி.பி. 1070 முதல் 1279 வரை ஆண்டுள்ளனர். முதற்கண் விசயாலயன் பரம்பரையில் வந்த சோழ மன்னர்களைப் பற்றிப் பார்ப்போம்.