தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- தொகுப்புரை

 • 3.7 தொகுப்புரை

  இப்பாடத்தின் வாயிலாகப் பல்லவ மன்னர்கள் நிருவாகத்தில் மிகுந்த கவனம் செலுத்தி ஆட்சியை நடத்தியுள்ளனர் என்று படித்து உணர்ந்திருப்பீர்கள். சமுதாயத்தில் தொழிலின் அடிப்படையில் நிறைய ஏற்றத் தாழ்வுகள் அமைந்திருந்தது பற்றியும் உணர்ந்திருப்பீர்கள்.

  அயல்நாட்டு வாணிபம், தொழில் போன்றவை சிறந்து விளங்கின. பல்லவ மன்னர்கள் கலைத் தொண்டு அதிகமாகச் செய்திருந்தனர் என்றும், பக்தி இயக்கம் வளர்ச்சியுற்றதோடு, அவ்வியக்கத்தின் வாயிலாகப் பல இலக்கிய வகைகளும், இலக்கியங்களும் தோன்றின என்றும் படித்து உணர்ந்திருப்பீர்கள்.

  தன் மதிப்பீடு : வினாக்கள் - II

  1.
  கலை ஆர்வம் கொண்ட இரு பல்லவ மன்னர்களைக் குறிப்பிடுக.
  2.
  குகைக் கோயில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
  3.
  சமண மதத்திலிருந்து சைவத்திற்கு மாறிய பல்லவ மன்னன் யார்?
  4.
  சித்தன்ன வாசலில் யாருடைய கோயில் குடையப்பட்டது?
  5.
  ஒற்றைக்கல் கோயிலுக்கு மற்றொரு பெயர் யாது?
  6.
  திறந்த வெளிச் சிற்பக் கலைக் கூடம் எது?
  7.
  மகேந்திரவர்மன் எழுதிய நூலின் பெயர் என்ன?
  8.
  தமிழகத்தில் பௌத்த மதம் எங்கு வளர்ச்சியுற்றிருந்தது?
  9.
  குணபதீச்சுரம் என்ற கோயிலை எழுப்பிய பல்லவ மன்னன் யார்?
  10.
  மூன்றாம் நந்திவர்மன் மேல் பாடப்பட்ட நூல் யாது?
புதுப்பிக்கபட்ட நாள் : 25-07-2017 18:39:54(இந்திய நேரம்)