Primary tabs
-
6.0 பாடமுன்னுரை
இப்பாடத்தில் மராட்டிய அரசு தமிழகத்தில் தோன்றிய வரலாறு மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளது. வடக்கே மராட்டிய நாட்டை ஆண்டு வந்த சத்திரபதி சிவாஜியும், தெற்கே தஞ்சையில் மராட்டிய அரசைத் தோற்றுவித்து ஆண்டு வந்த ஏகோஜியும் சகோதரர்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. சத்திரபதி சிவாஜியால் ஏகோஜி அடைந்த இன்னல்கள் மற்றும் பாதிப்புகள் எடுத்துக்கூறி விளக்கப்பட்டுள்ளன. ஏகோஜிக்குப் பின்னர், தஞ்சை மராட்டிய நாட்டை ஆண்டு வந்த மன்னர்கள் செய்த போர்கள், அறப்பணிகள் ஆகியவை விரிவாக விளக்கிக் காட்டப்பட்டுள்ளன. தஞ்சை மராட்டிய மன்னர்களில் இரண்டாம் சரபோஜி கலையரசராக இருந்து ஆட்சி செய்து வந்தது நன்கு விளக்கிக் காட்டப்பட்டுள்ளது.
தஞ்சை மராட்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களுடைய ஆட்சி முறை எவ்வாறு அமைந்திருந்தது என்பது வகைப்படுத்தி விரிவாக விளக்கிக் கூறப்பட்டுள்ளது.