Primary tabs
6.4 தொகுப்புரை
ஏகோஜியை முதலாகக் கொண்ட மராட்டிய மன்னர்கள் செய்த போர்கள், அறப்பணிகள் ஆகியவற்றைப் படித்து விளங்கியிருப்பீர்கள். மராட்டிய மன்னர்கள் ஆங்கிலேயர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளை அறிந்திருப்பீர்கள். மராட்டிய மன்னர்களில் இரண்டாம் சரபோஜி கலையரசராகத் திகழ்ந்தார் என்பதை விரிவாக அறிந்து கொண்டிருப்பீர்கள்.
மராட்டியர் ஆட்சிமுறை எவ்வாறு இருந்தது என்பதை விளக்கமாக அறிந்து கொண்டிருப்பீர்கள். மராட்டியர் ஆட்சியில் நாட்டுப்பிரிவுகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதைப் பற்றியும், அரசு அலுவலர், உழவர்கள் ஆகியோர் நிலைமை எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றியும், வாணிகம் எவ்வாறு நடைபெற்றது என்பதைப் பற்றியும் நன்கு படித்து அறிந்து கொண்டிருப்பீர்கள். மேலும் மராட்டியர் ஆட்சியின்போது சமயநிலை, தமிழ்மொழியின் நிலை ஆகியவை எவ்வாறு இருந்தன என்பதைப் பற்றியும் படித்துத் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II