தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

சமண இலக்கியங்கள்

  • 2.3 சமண இலக்கியங்கள்

    இக்கால கட்டத்தில் சமணர்கள் பாடிய நூல்களாக இரண்டு கிடைத்துள்ளன. அவை காக்கை பாடினியம், சாந்தி புராணம் என்பனவாம்.

    2.3.1 காக்கை பாடினியம்

    காக்கை பாடினியம் என்பது ஓர் இலக்கண நூல். இது காக்கைபாடினியார் என்பவரால் இயற்றப்பட்ட நூல். அகவல் யாப்பில் அமைந்த நூல். யாப்பு இலக்கண நூல். ஏழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூல் என்பார் தேவநேயப் பாவாணர். பதினோராம் நூற்றாண்டுக்குப் பின் தனி நூலாகவோ, முழுநூலாகவோ வழக்கில் இல்லை. முழுநூலாக இன்று நமக்கு இந்த நூல் கிடைக்கவில்லை. ஆனாலும் இதன் பெரும்பகுதி யாப்பருங்கல உரையில் இடையிடையே மேற்கோள் ஆக எடுத்தாளப்பட்டு உள்ளது. அங்ஙனம் மேற்கோளாக இடம் பெற்றிருக்கும் பாக்களைத் தொகுத்துப் புலவர் இரா.இளங்குமரனார் என்பவர் நூலாக வெளியிட்டுள்ளார். அவரே பாடல்களுக்கு விளக்கவுரையும் எழுதி உள்ளார்.

    2.3.2 சாந்தி புராணம்

    இந்த நூல் சமணநூல் ஆகும். விருத்தச் செய்யுளால் இந்நூல் இயற்றப்பட்டள்ளது. இந்நூல் இறந்துபட்டது. வெறும் ஒன்பது செய்யுள்கள் மட்டுமே கிடைத்துள்ளன. சமண சமய ஆசாரியரது வரலாற்றைச் சொல்லுவதற்காக எழுதப்பட்ட நூல் இதுவாகும். இயற்றியவர் பெயர் தெரியவில்லை.

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 18:19:09(இந்திய நேரம்)