தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தொகுப்புரை

  • 2.8 தொகுப்புரை

    பல்லவரும், பாண்டியரும் தமிழகத்தை ஆண்ட இக்காலக் கட்டத்தில் சைவ, வைணவ சமயங்கள் செல்வாக்குப் பெற்றன. சமண - பௌத்த சமயங்கள் சமயவாதங்களில் நலிந்ததை அப்பர், சம்பந்தர், திருமழிசை ஆழ்வார் ஆக்கங்களில் காணலாம். முதல் ஆறு தேவாரத் திருமுறைகள் தோன்றின. இதிகாச, இராமாயண நூல்கள் செல்வாக்குடன் இருந்தன. வைணவ இலக்கியம் தோற்றம் பெற்றது. அறநூல்கள், அரசர் புகழ் பாடும் தனிநூல்கள், சமணர் யாத்த இலக்கணநூல் (காக்கைப்பாடினியம்) பற்றி அறிய முடிகிறது. தமிழில் சைவ-வைணவ மறுமலர்ச்சியும், ‘பக்தி இயக்க’ எழுச்சியும், பக்திப் பாடல்களின் பெருக்கமும் ஒருசேர மலர்ந்ததைக் காண முடிகிறது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.

    முதல் மூன்று தேவாரத் திருமுறைகளைப் பாடியவர் யார்?

    2.

    சைவத்தின், ‘இருகண்கள்’ எனக் கருதப்படுவர் யாவர்?

    3.

    சம்பந்தர் எந்தப் பாண்டியனைச் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினார்?

    4.

    திருஞானசம்பந்தரது பதிகப் பாடல் அமைப்புப் பற்றி எழுதுக.

    5.

    நான்காம், ஐந்தாம், ஆறாம் தேவாரத் திருமுறைகளைப் பாடியவர் யார்?

    6.

    உங்களது பாடத்தில் குறிக்கப்பட்டுள்ள ஆழவார்களது பெயர்களையும், அவர்களது நூல்களின் பெயர்களையும் குறிப்பிடுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 10:06:20(இந்திய நேரம்)