Primary tabs
இக்காலக் கட்டத்தில் பல தனி நூல்களும் எழுந்தன. மன்னரது போர்த்திறன், வெற்றிச்சிறப்பு, கருணை, ஈகை, கொடை போன்ற பண்பு நலன்களைப் போற்றும் வண்ணம் இத்தனி நூல்கள் எழுந்தன.
போர் பற்றிய நூல் இது. சங்க கால அரசன் அதியமானின் தலைநகர் தகடூர் என்பது. தகடூரின் மீது சேரன், படையெடுத்துப் போரிட்டுப் பெற்ற வெற்றி இந்நூலில் இடம் பெற்றுள்ளது. எனவே, தகடூர் யாத்திரை என்று பெயர் பெற்றது. தகடூர் மாலை என்றும் அழைக்கப்படும். உரைநடை கலந்த செய்யுள் நூல் இதுவாகும். இப்போது இந்நூலின் செய்யுள்கள் நாற்பத்து நான்கு மட்டுமே கிடைக்கின்றன. செய்யுள் நடை சங்க இலக்கியம் போன்றது. வீரச்சுவை அந்தச் செய்யுள்களில் சிறந்து நிற்கிறது.