தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 3.0 பாட முன்னுரை

    எட்டாம் நூற்றாண்டில் சைவ, வைணவ இலக்கியங்கள் நன்முறையில் வளர்ந்தன. ஓயாத போர்கள் பல்லவரை நலிவுறச் செய்தன. பஞ்சம் தோன்றி மக்களை வாட்டியது. பஞ்ச வார வாரியம் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு அறுவடையிலும் சிறுபகுதி நெல் ஒதுக்கப்பட்டு, பஞ்சத்தின்போது பகிர்ந்தளிக்கப்பட்டதை மூன்றாம் நந்திவர்மனது கல்வெட்டு, ‘திருக்காட்டுப் பள்ளி பஞ்சவாரம் ஆயிரக் காடி நெல்' என்று விளக்குகிறது. பெரியபுராணம் பஞ்சம் நீக்க இறைவன் படிக்காசு நல்கியதைச் சொல்லும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 11:03:28(இந்திய நேரம்)