Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - II
4.
இறையனார் களவியல் உரையின் தனிச்சிறப்பு யாது?
இறையனார் களவியலுக்கு நக்கீரர் செய்த உரையே தமிழில் முதன்முதலில் தோன்றிய உரை என்பது இதன் சிறப்பு ஆகும். உரை நடையாக எழுதப்பட்ட போதிலும், செய்யுள் போலவே சீர்களின் அமைப்பும், எதுகை, மோனை அடுக்கும், சொற்களின் செறிவும், அடைகளும் கொண்டு புலவர்கள் கையாண்ட செறிவான உரை நடைக்குச் சான்றாக களவியல் உரை உள்ளது.