தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.2 மொழி வகைப்பாடு

  • 1.2 மொழி வகைப்பாடு (Classification)

    மொழி மக்களின் அடையாளம். ஓர் இனத்தவரைக் குறிக்கும் குறியீடு. மனிதரை இணைக்கும் உறவுச் சங்கிலி. மொழிக்கும் வளர்ச்சி உண்டு. மாற்றம் உண்டு. புறக்கணிப்பிற்கு ஆளான நிலையும் உண்டு. அது போல மொழிகளுக்கிடையே உறவும் உண்டு, கடன் தருதலும், கடன் பெறுதலும் உண்டு. மொழிகளுக்கு இடையே காணும் பொதுக் கூறுகளைக் கொண்டு மொழிகளைப் பல்வேறு வகைகளாக வகைப்படுத்தலாம். அவ்வகைப்பாடுகளைக் காண்போம்.

  • மொழி : பேச்சு மொழி, எழுத்து மொழி
  • மொழியைப் பேச்சு மொழி, எழுத்து மொழி என்று வகைப்படுத்தலாம்.

    நாக்கு, பல், அண்ணம், உதடு, உள்நாக்கு, காற்றுக் குழல், குரல்வளை, தொண்டை என்று உடம்பில் பல உறுப்புகள் உள்ளன. இவை ‘ஒலி உறுப்புகள்’ ஆகும். இவற்றைப் பயன்படுத்தி மனிதர்கள் ஒலி எழுப்பலாம். பொருள் தரும் ஒலிகளை, ‘பேச்சு’ என்கிறோம். பொருள் அற்ற ஒலிகளை ‘வெற்றொலி’ என்கிறோம். மொழியின் உயிர்நாடி பேச்சுதான்.


    நாக்கு

    பல்

    அண்ணம்

    உதடு
     

    உள்நாக்கு

    அவள்
    வந்தாள்
    உடல்
    லி
    ம்
    விழுந்தது
    ம்
    னிவு
    கும்
    ணிவு

    ள, ல, ழ, ன, ண போன்ற ஒலிகளை ஒலிக்கும் போது சரியான ஆனால் நுட்பமான வேறுபாடு தேவைப்படுகிறது.

    மென்மை
    மேன்மை
    ட்டம்
    வாட்டம்

    என்று உச்சரிப்பில் நீட்டல், குறுக்கல் உண்டு. பழந்தமிழ்ச் சான்றோர் தமிழ் எழுத்துகளை ஒலிக்க ஆகும் கால அளவைத் துல்லியமாகக் கணக்கிட்டுள்ளனர். ‘மாத்திரை’ என்பது ஒலியின் கால அளவு. ஒரு மாத்திரை என்பது இயல்பாகக் கண் இமைக்கும் நேரம், கை நொடிக்கும் நேரம் ஆகும். குறிலை உச்சரிக்கும் கால அளவு - ஒரு மாத்திரை. நெடிலை உச்சரிக்கும் கால அளவு - இரு மாத்திரை. முதலில் பேச்சு மொழிதான் தோன்றியிருக்க வேண்டும். ஒருவர் பேசுவதை ஒலிநாடாவில் பதிவு செய்ய இன்று முடிகிறது. தொலைபேசி வழி ஒரு நாட்டில் இருப்பவர் இன்னொரு நாட்டில் இருப்பவரோடு பேச முடிகிறது. ஆனால் சங்க காலத்தில் மக்கள் பேசிய தமிழ் எப்படி இருந்தது? பக்தி இலக்கியப் பாசுரங்களை ஓதிய தமிழர்கள் இடைக்காலத்தில் பேசிய தமிழ் எப்படி இருந்தது? இச் செய்திகளை அறிந்து கொள்ள நமக்கு வாய்ப்பு இல்லை.

  • வழக்கு மொழி - வழக்கொழிந்த மொழி
  • பேச்சு மொழியை மேற்கண்டவாறு பகுக்க முடியும். வழக்கு மொழி என்பது இன்றும் மக்களால் பேசப்படும் மொழி. வழக்கொழிந்த மொழி என்பது இன்று மக்களிடையே பேசப்படாத மொழி. அது, முன்னொரு காலத்தில் பேசப்பட்டிருக்கும். ஏதோ காரணத்தால் பேசுவது தடைபட்டிருக்கும். வடமொழி எனப்படும் சமஸ்கிருதம் மக்களிடையே பேசப்படும் மொழியாக இன்று இல்லை. பேச்சு வழக்கொழிந்த மொழிக்கு வடமொழியைச் சான்றாகச் சொல்வார்கள்.

    மொழிக்கு நாம் தந்த வரிவடிவமே எழுத்து மொழி ஆகும். எழுத்து என்பது ஒலியை எழுதிக் காட்டும் குறியீடுதான். இந்த ஒலிக்கு இது குறியீடு என்று தெளிவாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கும். உலக மொழிகளில் எழுத்து மொழி வடிவம் பெறாமல், பேச்சு மொழியாகவே விளங்கும் மொழிகள் பல உள்ளன. எழுத்து மொழியை இலக்கிய மொழி என்றும் குறிப்பர். தமிழ் ஓர் எழுத்து மொழி. பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியங்கள் தமிழில் உண்டு. அவை எழுதப்பட்டதால்தான் இன்றளவும் பாதுகாப்பாக உள்ளன. இலக்கியச் செழுமை, தமிழுக்கு உயர்தனிச் செம்மொழி என்ற சிறப்பைப் பெற்றுத் தந்துள்ளது. எழுதும் போது எந்தெந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்; எப்படி அமைந்தால் ஏற்றுக் கொள்ளலாம்; எப்படி அமையக் கூடாது என்பவற்றை அறிவுறுத்தும் இலக்கண நூல்கள் தமிழில் உள்ளன. தொல்காப்பியம் என்பது ஒரு தலைசிறந்த இலக்கண நூல். தொல்காப்பியப் பாயிரம் பேச்சுத் தமிழை வழக்கு என்று குறிப்பிடுகிறது. எப்படி எழுத வேண்டும் என்று தொல்காப்பியம் எழுத்து மொழியைக் கற்றுத் தருகிறது.

    பேசுபவர் மொழியின் ஒலி வடிவத்தைக் கையாள்கிறார். பேச்சு மொழி பிறக்கிறது. அதுபோலவே,

    எழுதுபவர் மொழியின் வரி வடிவத்தைப் பயன்படுத்துகிறார். எழுத்து மொழி உருவாகிறது. ஒரு மொழியைப் பிழையின்றிப் பேசவும், தவறின்றி எழுதவும் ‘மொழி அறிவு’ தேவை. இம்மொழியறிவுடன் கற்பனை வளம், படைப்பாற்றல் இணையும்போது இலக்கியம் பிறக்கிறது.


    1.
    மொழியின் இலக்கணம் யாது?
    2.
    மொழி வகைப்பாடு என்று எதனைக் குறிப்பிடுகிறோம்?
    3.
    எழுத்து மொழி என்பது யாது?
புதுப்பிக்கபட்ட நாள் : 08-08-2017 16:36:38(இந்திய நேரம்)