Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
1.
திராவிட மொழிகள் எங்ஙனம் பகுக்கப்படுகின்றன?
-
திராவிட மொழிகள், ‘திருந்திய மொழிகள்’ என்றும், ‘திருந்தாத மொழிகள்’ என்றும் கால்டுவெல்லால் பகுக்கப்பட்டன.
-
தமிழ்த்தொகுதி என்றும் தெலுங்குத் தொகுதி என்றும் டாக்டர் ஸ்டெங்கொனாவால் பகுக்கப்பட்டன.
-
மொழி வழங்கும் நிலப்பரப்பின் அடிப்படையில் தென் திராவிட மொழிகள், நடுத் திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என்று இன்றைய அறிஞர்களால் பகுக்கப்படுகின்றன.
-