தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 1.6 தொகுப்புரை

    நண்பர்களே! இதுவரை பல்லவர் காலத் தமிழில் எழுத்தியல் குறித்துப் பல செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளைத் தெரிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

    பல்லவர் காலத் தமிழை அறிய உதவும் இலக்கியங்கள், இலக்கணம், கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்ற செய்திகளை அறிந்து கொண்டீர்கள்.
    அந்தக் காலக் கட்டத்தில் தமிழ் மொழியில் ஏற்பட்ட உயிர் எழுத்து மாற்றங்களையும் உயிரின் ஒலியளவில் ஏற்பட்ட மாற்றங்களையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
    பல்லவர் காலத்தில் உயிரெழுத்துகள் மட்டுமன்றி மெய்யெழுத்துகளும் எத்தகைய மாற்றங்களுக்கு உள்ளாயின என்பதனையும், தனி ஆய்தத்தின் தோற்றச் சிறப்பினையும் பல சான்றுகள் மூலம் நீங்கள் நன்கு உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1

    மொழிமுதல் ஙகரம் வருவதாக எந்த இலக்கண நூல் குறிப்பிடுகிறது?

    2

    மெய்யொலிகள் இடையண்ணச் சாயல் பெறுதலுக்கு இரு உதாரணங்கள் தருக

    3

    நந்தா விளக்கு, நிலைதாங்கி - இவற்றிலுள்ள மாற்றொலியன்களைப் புலப்படுத்துக.

    4

    வேள்விக்குடிச் செப்பேட்டில் ஒரே பொருளைத் தரும் மூன்று வடிவங்கள் யாவை?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 12:04:26(இந்திய நேரம்)