Primary tabs
-
4.0 பாட முன்னுரை
நாட்டுப்புறத் தெய்வ வழிபாடுகளோடும் திருவிழாக்களோடும் இணைந்த ஒன்றாக நிகழ்த்தப்பட்டு வருபவை நாட்டுப்புறக் கலைகள். இத்தொடர்பின் காரணமாகவே வழிபாடும் திருவிழாக்களும் என்பதையடுத்து நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் பாடமாக அமைந்துள்ளது.
நாட்டுப்புற மக்களின் மரபு வழியான பழக்க வழக்கங்கள், வழிபாடுகள், சடங்குகள், நம்பிக்கைகள் போன்ற பண்பாட்டு உணர்வுகளின் வெளிப்பாட்டு வாயில்களாக நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் விளங்குகின்றன. இக்கலைகள் நாட்டுப்புறக் கலைஞர்களாலும் மக்களாலும் இன்றளவும் நிகழ்த்தப் பட்டும் பாதுகாக்கப் பட்டும் வருகின்றன.
தமிழ்ப் பண்பாட்டைக் கற்க விரும்புவோர் நாட்டுப்புற நிகழ்த்து கலைகளைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமானதாகும். இதனைக் கருத்தில் கொண்டே நாட்டுப்புற மக்களால் ஆடப் பெற்றும் நிகழ்த்தப் பெற்றும் வரும் நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் (Folk Performing Arts) இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன.