தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Bharathiyar Kavithai Ulagam-பாரதியாரின் தேசியப் பாடல்கள்

  • பாடம் - 2

    C01112 பாரதியாரின் தேசியப் பாடல்கள்

     

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    பாரதியாரின் தேசியப் பாடல்கள், பாரத நாடு, தமிழ்நாடு, சுதந்திரம், தேசிய இயக்கப் பாடல்கள், தேசியத் தலைவர்கள், பிற நாடுகள் என்ற உள் தலைப்புகளின் கீழ்த் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்களின் பாடுபொருள், பாடல்திறன் ஆகியவற்றின் வழியாகப் பாரதியைப் பற்றி அறியக் கிடக்கும் கருத்துகள் இப்பாடத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

     

    இப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
     

     

    •  
    பாரதியின் தேசியப் பாடல்கள் என்னென்ன வகை மற்றும் என்னென்ன பொருள் பற்றியன என்பதை நீங்கள் எடுத்துக் கூறலாம்.
    •  
    பாரதியின் தமிழ் உணர்வு, தேசிய உணர்வு, மனிதாபிமான உணர்வு, ஆகியவை குறித்து விளக்கம் தரலாம்.
    •  
    பாரதியின் தொலைநோக்குப் பார்வைக்கும், நல்லார்வ நலத்திற்கும் அவர் பாடல்கள் வழியாக எடுத்துக்காட்டுகள் தரலாம்.
    •  
    சாதி, இன, நிலப் பாகுபாடுகளுக்கு அப்பால் நாட்டுப்பற்று மற்றும் மனிதாபிமான நோக்கில், நல்லதைப் போற்றுதல், தீயதைத் தூற்றுதல் என்னும் பாரதியின் நடுநிலை நோக்கை அவருடைய ‘தேசியத் தலைவர்கள்’, ‘பிற நாடுகள்’ என்ற தலைப்புகளில் காணப்படும் கவிதைகளின் வழியாக விவரிக்கலாம்.
    •  
    தேசிய இயக்கத்திற்கு வேகம் சேர்க்கும் உணர்ச்சிப் பெருக்கினை, பாரதியின் தேசிய இயக்கப் பாடல்களில் இனம் காண முடியும்.

     

    பாடஅமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:53:53(இந்திய நேரம்)