Primary tabs
-
பாடம் - 5
C01115 பாரதியார் பாடல்களில் சமுதாய நோக்கு
சாதி, மத, இன, மொழி வரம்புகளுக்கு அப்பாற்பட்ட பரந்த ஒரு சமுதாயச் சிந்தனையைப் பாரதியார் தம் பாடல்கள் வழியாக வெளிப்படுத்துவதை எடுத்துக்காட்ட இப்பாடம் முனைகிறது. தீண்டாமை, மூடநம்பிக்கை, பெண்ணடிமை போன்ற சமுதாயத் தீமைகளுக்கு எதிராகப் பாரதியார் மக்களை விழிப்படையச் செய்ய மேற்கொண்ட முயற்சி; சமுதாய மேம்பாட்டிற்குப் பெண்விடுதலை, கல்வி, அறிவியல் நோக்கு, தொழில் வளம் ஆகியவற்றின் தேவையைத் தம் கவிதைகள் வழியாகப் பாரதியார் எடுத்துரைத்தது - இவை போன்ற தகவல்கள் இப்பாடத்தில் இடம் பெறுகின்றன.
இப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
பாரதியின் பாடல்கள் சமுதாய நலன் கருதி எழுதப்பட்டவை என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்க இயலும்.பெண்ணியக் கோட்பாடுகள் உருக் கொள்வதற்கு முன்பே, பாரதியார் பெண் விடுதலை, பெண்ணுரிமைச் சிந்தனைகளுக்கு வித்திட்டிருப்பதை அவர் படைப்புகளில் இருந்து எடுத்துக்காட்ட இயலும்.சாதிக்கொடுமை, குழந்தை மணம், வறுமை, மூடநம்பிக்கை போன்ற சமுதாயத் தீமைகளுக்கு எதிரான பாரதியின் குரலை இனங்கண்டு எடுத்துக்காட்ட இயலும்.பாரதியின் சமுதாய நோக்கு, சாதி, மதம், இனம், மொழி, நாடு போன்ற வரம்புகளுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய நோக்கு என்பதனைச் சான்று காட்ட இயலும்.