தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Bharathiyar Kavithai Ulagam- பாரதியாரின் வாழ்க்கைச் சித்திரம்

  • பாடம் - 1

    C01111 பாரதியாரின் வாழ்க்கைச் சித்திரம்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    வாழையடி வாழையெனத் தமிழ்ப் பாரம்பரியத்தைக் (tradition)  காத்து வரும் புலவர் திருக்கூட்டம் ஒன்று தமிழுக்கு உண்டு. அக்கூட்டத்திலே தாமும் ஒருவர் என உரிமை பாராட்டிக் கொண்டவர் பாரதியார். “எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா, யானும்வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்” (பாரதி அறுபத்தாறு: 1-2) என ஒப்புதல் வாக்குமூலம் தந்தவர் அவர். எட்டயபுரத்தில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த அவர் “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொல்புதிது, "எனக் கவிதை படைத்த அவர் தம் வாழ்வில் படிப்படியாக வளர்ந்த பான்மையினை, இந்தப் பாடம் படம்பிடித்துக் காட்ட முற்படுகின்றது.

     

    இப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

     

    •  
    பாரதியின் பிறப்பு.
    •  
    இளமையில் நேர்ந்த இன்னல்கள்: தாயாரின் மறைவு, தந்தையாரின் கண்டிப்பு, வேண்டாத கல்வி, குழந்தைத் திருமணம், தந்தையாரின் பொருள் இழப்பும் மறைவும்.
    •  
    இளமையில் துளிர் விட்ட கவிதை ஆற்றல்.
    •  
    காசி வாழ்க்கை - சுதந்திர தாகத்தையும், புரட்சி எண்ணங்களையும் தோற்றுவித்தது.
    •  
    எட்டயபுரம் சமஸ்தானப் பொறுப்பும், மதுரையில் தமிழாசிரியப் பணியும்.
    •  
    பத்திரிகைகளில் ஆசிரியப்பணி - தேசிய இயக்கத்திலும், கவிதைகளிலும் தீவிரமாக ஆழ்ந்தது.
    •  

    புதுச்சேரியில் தங்கியிருந்து, ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்தது.

    •  

    தம்முடைய சமுதாயப் புரட்சியால் கடையத்தில் மக்களின் பகைக்கு ஆளானது.

    •  
    சென்னைக்குத் திரும்பி, தேச விடுதலை இயக்கத்தை ஊக்குவித்தது.
    •  
    மகாகவியின் அகால மரணம்.

    போன்ற மேற்கூறிய செய்திகளை விவரமாக அறியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:51:12(இந்திய நேரம்)