தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.7 தொகுப்புரை

  • 5.7 தொகுப்புரை

    பாரதியார் சமுதாய முன்னேற்றத்திற்குத் தடையாய் இருந்தவற்றைப் போக்க, தகுந்த வழிமுறைகளை எடுத்துச் சொல்லுகிறார். வறுமை ஒழிக்கப்படவேண்டும், பொதுவுடைமைச் சமுதாயம் மலரவேண்டும் என்று விரும்புகிறார்.

    சமுதாயத்தைச் சீர்குலைத்த சாதிவேறுபாடுகள், தீண்டாமை, சமயவேறுபாடு இவற்றை ஒழிக்க வேண்டும் என்றார். தூய்மையான வாழ்வே வேறுபாட்டை நீக்கும் என்கிறார். ஆறில் ஒரு பங்கு மக்களைத் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கியதால் நாடு அடிமைப்பட்டது என்கிறார். சாதிகளற்ற சமுதாயத்தைச் ‘தமிழச் சாதி’ என்று பெயரிட்டுப் புதுமையாக அழைக்கிறார். புதிய பாரத சமுதாயத்தைக் காண்கின்றார். அந்தப் பாரத சமுதாயம் உலகத்துக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் என்கிறார்.

    மூடநம்பிக்கைகளைச் சாடுகின்றார். அச்சமே இவற்றிக்கு அடிப்படைக் காரணம் என்கிறார். கட்டாயத் திருமணம், குழந்தை மணம், வரதட்சணைக் கொடுமை, விதவைக் கொடுமை இவற்றை நீக்க வேண்டுகிறார். பெண்கல்வி பற்றியும், புதுமைப்பெண்கள் பற்றியும் கூறுகிறார்.

    ஆங்கிலக் கல்வியின் அவலத்தையும், தாய்மொழிக் கல்வியின் சிறப்பையும் எடுத்துரைத்து, புதிய கல்வித்திட்டத்தை வகுத்துத் தருகிறார். அறிவியல் நோக்குடன் புதியன படைக்க வேண்டுகின்றார்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.

    ‘அன்ன யாவினும் புண்ணியம் கோடி’ என்பதில் பாரதி எதைக் கூறுகிறார்?

    2.

    பாரதி தொழிற் கல்வியை வற்புறுத்துவதின் நோக்கம் யாது?

    3.

    ஆங்கிலக் கல்வியின் விளைவால் நேர்ந்த அவலம் யாது?

    4.

    ‘பக்கத் திருப்பவர் துன்பம் - தன்னைப் பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி’ - இவ்வடிகள் புலப்படுத்துவது யாது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-11-2017 16:37:14(இந்திய நேரம்)