Primary tabs
- பாடம் - 2C01142 பாரதிதாசன் கண்ட இயற்கை
இயற்கைப் பொருள்களைப் பார்த்து அவற்றின் அழகைத் தமது பாடல்களில் பாரதிதாசன் வெளிப்படுத்தியுள்ளார்.
மலையையும், மலையிலிருந்து பாயும் அருவியையும், மழையையும் உவமைகளுடன் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
வானத்தையும், நிலவையும், காலையையும் மாலையையும் தமது கவிதைக்குள் பதித்து, அவற்றின் அழகை உலாவரச் செய்துள்ளார்.
இந்த இயற்கைக் காட்சிகளின் வாயிலாகத் தமது சமுதாயக் கண்ணோட்டத்தையும் பாரதிதாசன் தெளிவுபடுத்தியுள்ளார். இவை போன்ற செய்திகளை இந்தப் பாடம் தெரிவிக்கிறது.
இப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இயற்கை வருணனையில் பாரதிதாசனின் அணுகுமுறை இருதரப்பட்டதாக அமைந்திருக்கிறது.
1. “இருந்ததனை இருந்தபடி” காட்டுதல்
2. இருந்ததனைத் தன் கருத்துக்கும்/உணர்வுகளுக்கும் இணையாக இருப்பதாகப் புனைந்து காட்டுதல்இப்பாடத்தைப் படித்து முடிக்கும் பொழுது, நீங்கள்
-
வெவ்வேறு இடங்களில் பாரதிதாசன் இயற்கையை எடுத்தாளுகையில் எந்த அணுகுமுறையை மேற்கொண்டுள்ளார் என்பதை இனங்காண இயலும்.
-
இயற்கை வருணனையிலும் பாரதிதாசனின் சமூகச் சிந்தனைகள் மிளிர்வதை எடுத்துச் சொல்லும் திறன் பெற்றவராக ஆவீர்கள்.
-