தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C012240.htm-பாட முன்னுரை

  • 4.0 பாட முன்னுரை

    பிற்காலத்தில் தோன்றிய அறநூல்களில் ஒன்று வெற்றிவேற்கை. இதை இயற்றியவர் அதிவீரராம பாண்டியன். இவர் பாண்டிய நாட்டின் தென்பகுதியை ஆண்ட மன்னர். மன்னராய் இருந்த இவர், தமிழில் புலமை பெற்று விளங்கியதால், தமிழ்ப் புலவர்களுக்கு ஆதரவு அளித்தார். புலவர்கள் இயற்றிய படைப்புகள் குற்றம் உடையதாக இருந்தால் இவர் தண்டித்தார்; சிறப்பாக இருந்தால் பரிசுகள் வழங்கினார்.

    இவர், நைடதம், காசிக்காண்டம், திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி முதலிய வேறு நூல்களையும் இயற்றியுள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)