தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடமுன்னுரை

  • 2.0 பாட முன்னுரை

    பழந்தமிழ் நாட்டில் மக்கள் நல்வாழ்வுக்காகப் பேரரசர்கள் ஆட்சி புரிந்தனர். சிற்றரசர்களும் நல்லாட்சிக்குத் துணை புரிந்தனர். அவர்கள் பரம்பரை பரம்பரையாக ஆளும் உரிமை பெற்றிருந்தார்கள். தமிழக மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர்களைப் படைப்புக் காலம் தொட்டு இருந்து வரும் குடிகள் என்று பழைய உரையாசிரியர்கள் பாராட்டுவர். கால வெள்ளத்தில் பழைய அரச மரபுகள் சில மறைந்து புதிய அரச மரபுகள் தோன்றின. சில அரசர்கள் தங்களுக்குள் போரில் ஈடுபட்டனர், சிலர் நட்புடன் வாழ்ந்தனர். அவர்கள் அனைவரும் மக்கள் நல்வாழ்வின் பொருட்டே இணைந்து ஆட்சி புரிந்தனர். அவர்களைப் பற்றிய ஏராளமான கல்வெட்டுகள் கிடைக்கின்றன. அவற்றின் வாயிலாக அவர்கள் ஆட்சி பற்றியும், அவர்கள் வரலாறு பற்றியும் பல செய்திகளை நாம் அறிகின்றோம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-10-2017 18:01:10(இந்திய நேரம்)