தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D01126-6.0 பாட முன்னுரை

  • 6.0 பாட முன்னுரை

    இலக்கியம் என்பது காலத்தைக் காட்டும் கண்ணாடி, வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என மேலை நாட்டார் இலக்கியங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளனர். இக்கொள்கை, காலத்தைக் கடந்தும் இடத்தைக் கடந்தும், தனிமனிதப் பழக்க வழக்கங்களையும் சமுதாய நிலைகளையும் இலக்கியம் நமக்கு எடுத்துச் சொல்லுவதால் ஏற்பட்டதாகும்.

    தமிழில் இலக்கியத்தை இலக்கு + இயம் = இலக்கியம் எனப் பிரித்துக் குறிக்கோளைக் கூறுவது என்று பொருளுரைப்பர். எனவே, இலக்கியம் என்பது இருந்ததை - இருப்பதை எடுத்துக் காட்டுவதோடு நில்லாமல் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் இருக்க வேண்டும்.. இந்த இரு நிலைகளிலேயே தமிழ் இலக்கியங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் அகநானூறு குறிப்பிடத்தக்கது. இப்பாடம் அகநானூறு காட்டும் சமுதாய நிலையை விளக்குகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:28:59(இந்திய நேரம்)