Primary tabs
-
பாடம் - 2D02132 வெட்சித் திணை
திணை என்பதற்குரிய பல பொருள்களைக் கூறுகிறது.
வெட்சி ஒரு குறியீடாக விளங்குவதைக் கூறுகிறது. இது குறிஞ்சியெனும் உரிப்பொருளுக்குப் புறமாவதற்கான காரணங்களுள் சிலவற்றை இயம்புகின்றது.
வெட்சித் திணையையும், அதன் துறைகளாகிய வெட்சியரவம் முதல் வெறியாட்டு வரை உள்ள பத்தொன்பதனையும் விளக்குகின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
வெட்சி என்பது ஆநிரை கவர்தலைக் குறிக்கும் குறியீட்டுச் சொல் என்பதையும் அது நிரை கவர்தல் ஆகும் என்பதையும் அறியலாம்.
-
வெட்சித் துறைகள் பத்தொன்பதும் அவ்வப் பெயரால் குறிக்கப் பெற்றதன் காரணத்தை ஊகித்துணரலாம்.
-
வெட்சித் துறைகள், கவர்தல் - பேணல் - அடைதல் - பகுத்தளித்தல் - வணங்கல் என்னும் ஐந்து பகுதிகளுள் அடங்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
-
ஆநிரை கவர்தலாகிய போர் அறத்தைப் பற்றி விளக்கமாக அறிந்து மகிழலாம்.
-