தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

வெட்சித் திணையும் துறைகளும்

  • 2.2 வெட்சித் திணையும் துறைகளும்

    பெரும்பான்மையும் மண் கவர நினைக்கும் வேந்தனே முதலில் போர்ச் செயலைத் தொடங்குவான். அவன் முதலில் செய்வது ஆநிரை கவர்தலே ஆகும். வெட்சி நிரை கவர்தல் என்பது பழம்பாடல் ஒன்றன் பகுதி, அறம் பேணும் அரசர்க்கு ஆநிரை (ஆநிரை = ஆ+நிரை) கவர்தலே உற்ற தொழிலாகும் என்பதைப் பின்னர்ப் பார்க்கலாம்.

    துறை என்பது ஒரு நிகழ்வுக்கான வளர்ச்சிப்படி நிலைகளுள் ஒன்று என்பதை முன்னைய பாடத்தில் படித்தோம் அல்லவா? வெட்சித் திணைக்குப் பத்தொன்பது துறைகள் கூறப்படுகின்றன. வெட்சித் திணையையும் அதற்குரிய துறைகளையும் புறப்பொருள் வெண்பாமாலையின் முதல் நூற்பா கூறும், அது வருமாறு,

    வெட்சி, வெட்சி அரவம், விரிச்சி, செலவு,
    வேயே, புறத்திறை, ஊர்கொலை, ஆகோள்,
    பூசல் மாற்றே, புகழ்சுரத் துய்த்தல்,
    தலைத்தோற் றம்மே, தந்துநிறை, பாதீடு,
    உண்டாட்டு, உயர்கொடை, புலனறி சிறப்பே,
    பிள்ளை வழக்கே, பெருந்துடி நிலையே,
    கொற்றவை நிலையே, வெறியாட்டு உளப்பட
    எட்டு இரண்டு ஏனை நான்கொடு தொகைஇ
    வெட்சியும் வெட்சித் துறையும் ஆகும்.

    வெட்சி ஒழுக்கத்தில் ஐந்து நிலைகளைக் காணமுடியும். அவை, கவர்தல், பேணல், அடைதல், பகுத்தல், வணங்கல் என்பனவாம். வெட்சித் திணையின் 19 துறைகளையும் இந்த 5 நிலைகளில் அடக்கலாம்.

    • வெட்சியின் ஐந்து நிலைகள்
    எண்
    நிலைகள்
    எண்ணிக்கை
    துறைகள்
    1
    கவர்தல்
    7
    வெட்சியரவம், விரிச்சி, செலவு, வேய், புறத்திறை, ஊர்கொலை, ஆகோள்
    2
    பேணல்
    2
    பூசல் மாற்று, சுரத்துய்த்தல் (காட்டு வழியில் ஓட்டிச் செல்லுதல்)
    3
    அடைதல்
    2
    தலைத்தோற்றம், தந்துநிறை
    4
    பகுத்தல்
    6
    பாதீடு, உண்டாட்டு, கொடை, புலனறி சிறப்பு, பிள்ளை வழக்கு, துடிநிலை
    5
    வணங்கல்
    2
    கொற்றவை நிலை, வெறியாட்டு
    --
    -
    19
    -

    அவற்றின் பொருளையும், சில துறைகளின் விளக்கங்களையும் காணலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 06-11-2017 11:48:38(இந்திய நேரம்)