Primary tabs
-
1.0 பாட முன்னுரை
மக்களின் கருத்து வெளிப்பாட்டுக்கு மொழி கருவியாகும். அந்நிலையில் அது பேச்சு, எழுத்து ஆகிய இருவழிகளில் பயன்படுகிறது. பேச்சு பெரும்பாலும் உரைநடை முறையிலேயே அமைகிறது. எழுத்து என்பது உரைநடை, செய்யுள் ஆகிய இருவகை நடைகளிலும் அமைகிறது. தமிழில் பழங்கால முதல் செய்யுள் நடையே இலக்கியப் படைப்புக்கு மிகுதியும் கையாளப்பட்டு வந்துள்ளது. செய்யுள் எவ்வாறு இயற்றப் பெறுகிறது என்பதைப் பற்றிச் சொல்வதே யாப்பு இலக்கணமாகும். இதைப் பற்றிய பொதுவான செய்திகள், யாப்பு இலக்கணம் - பொது அறிமுகம் என்னும் தலைப்பிலான இந்தப் பாடத்தில் கூறப்பட்டுள்ளன.