தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - D03114-ஒன்றாத தளைகள்

  • 4.3 ஒன்றாத தளைகள்

    முன்பு, எந்தச்சீர் (இயற்சீர், வெண்சீர், வஞ்சிச்சீர்) நிலைச்சீராக நிற்கின்றதோ அந்தச் சீர்க்குரிய பாக்களின் பெயரையே தளைக்கும் பெயராக வைத்துள்ளனர் என்றும், எந்தச் சீர் நிலைச்சீராக நிற்கின்றதோ அந்தச் சீரின் ஈற்றசையே வந்த சீரின் முதலசையாக அமையுமானால் அவ்வகைத் தளைகளை ஒன்றிய தளைகள் என்றனர் என்றும் படித்தோம். இப்போது இங்கு, நின்ற சீரின் ஈற்றசையோடு வரும் சீரின் முதலசை ஒன்றாமையால் உண்டாகும் தளைகளைக் காண்போம். இவை, ஒன்றாத தளைகள் எனப்படுகின்றன.

    ஒன்றாமையாவது, நின்ற சீரின் ஈற்றசை `நேர்’ அசையானால் வந்த சீரின் முதலசை நிரையாவது; நின்ற சீரின் ஈற்றசை `நிரையசை’ ஆனால் வந்த சீரின் முதலசை நேர் ஆவது ஆகும்.

    ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை என்பன தம் பொருளைத் தாமே உணர்த்தும் இலக்கணம் உடைய சொற்களாம். முன் சொன்ன ஒன்றாத தளைகள் மூன்றனுள் இயற்சீர் வெண்தளையும் கலித்தளையும் ஆகிய இரண்டும் ஒன்றாமையாகிய தன் இலக்கணத்தைக் காட்டுவதில்லை என்பது கவனிக்கத்தகுவது. இனி ஒன்றாத தளைகள் மூன்றனைக் காண்போம்.

    ஒன்றாத தளைகளுள் ஒன்றாக இயற்சீர் வெண்டளையை இனம் பற்றிக் கொண்டாலும், இத்தளை இரண்டு வகையாக வருவதைக் காண்கின்றோம். மாமுன் நிரையும் இயற்சீர் வெண்டளை ; விளமுன் நேரும் இயற்சீர் வெண்டளை. இவ்வகையில், ஒன்றாத தளைகளும் நான்கு எனக் கருதத் தோன்றுகின்றது.

    4.3.1 இயற்சீர் வெண்தளை

    ஒன்றாத தளைகளுள் ஒன்று, வெண்பாவுக்குரிய தளைகளுள் ஒரு வகை. வெண்பாவுக்கு உரிமையும், இயற்சீரினால் உருவாவது என்பதும் தோன்ற இயற்சீர் வெண்டளை எனப் பெறுவது. இயற்சீர் வெண்டளை என்ற பெயரே அதனுடைய இலக்கணத்தைத் தாங்கிக் கொண்டுள்ளது. மா முன் நிரை என்று நிற்பதால் வருவது.

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்

    இது குறள் வெண்பா. இதனுள் `பிறவி’ என்பது நின்ற சீர்; `பெருங்கடல்’ என்பது வந்த சீர்.

    `நீந்துவர்’ என்பதை நோக்கப் `பெருங்கடல்’ என்பது நின்ற சீர்; நீந்துவர் என்பது வந்த சீர். இக்கருத்து முன்னமும் கூறப்பட்டது. நினைந்து பாருங்கள்.

    நின்ற சீர்
    வந்த சீர்
    பிறவிப்
    பெருங்கடல்
    பி ற
    வி ப்
    பெ ரு ங்
    க ட ல்
    கு கு
    கு ஒ
    கு கு ஒ
    கு கு ஒ
    இணைக்குறில்
    தனிக்குறில் ஒற்று
    இணைக்குறில் ஒற்று
    இணைக்குறில் ஒற்று
    நிரை
    நேர்
    நிரை
    நிரை
    புளிமா (வாய்பாடு)
    கருவிளம் (வாய்பாடு)
    மா முன் நிரை
    இயற்சீர் வெண்டளை

    நின்ற சீர் `பிறவி’ என்பது. இது, இயற்சீர்; இயற்சீரில் `மா’ எனும் வாய்பாட்டுச் சொல்லை இறுதியிற் கொண்ட ஈரசைச்சீர். இம்மாச்சீரின் முன் நேர் அசையை முதலாகவுடைய சீர் வந்திருந்தால் ஒன்றுவதாய் இருந்திருக்கும். அவ்வாறு வரவில்லை. மாறாக, நிரையசையை முதலாகவுடைய சீரே வந்துள்ளது. அதாவது, ஒன்றாத சீரே வந்துள்ளது. மா(நேர்) முன் நிரை யென. எனவே, ஒன்றாத தளை.

    வெண்பாவுக்குரிய தளை வெண்டளை எனப்படும். ஆதலால், இங்கு வந்தது வெண்டளை. அதுவும் இயற்சீரால் வந்த வெண்டளை. ஆகவே, இது இயற்சீர் வெண்டளை எனப்படுகின்றது. மா(நேர்) - முன் - நிரை, இயற்சீர் வெண்டளை.

    நின்ற சீர்
    வந்த சீர்
    பெருங்கடல்
    நீந்துவர்
    பெ ரு ங்
    க ட ல்
    நீ ந்
    து வ ர்
    கு கு ஒ
    கு கு ஒ
    நெ ஒ
    கு கு ஒ
    இணைக்குறில் ஒற்று
    இணைக்குறில் ஒற்று
    தனிநெடில் ஒற்று
    இணைக்குறில் ஒற்று
    நிரை
    நிரை
    நேர்
    நிரை
    கருவிளம் (வாய்பாடு)
    கூவிளம் (வாய்பாடு)
    விளம் முன் நேர்
    இயற்சீர் வெண்டளை

    நின்ற சீர் பெருங்கடல். இது, இயற்சீர். விளம் என்னும் வாய்பாட்டுச் சொல்லை இறுதியில் கொண்ட ஈரசைச்சீர். இந்த விள ஈற்று இயற்சீரின் முன்னர் நேரசையை முதலசையாகக் கொண்ட வரும் சீர், தளைந்துள்ளது. விளம் முன் நேர் வந்து இயற்சீர் வெண்டளை தோன்றியது.

    4.3.2 கலித்தளை

    வெண்பாவுக்குரிமையுடைய சீர் நான்கு. அவை, `காய்’ என்னும் வாய்பாட்டுச்சொல்லை இறுதியில் கொண்ட மூவசைச்சீர்களாம்.

    தேமாங்காய்
    புளிமாங்காய்
    கருவிளங்காய்
    கூவிளங்காய்

    என்பன அவை. வெண்பாவுக்குரிய இவை கலிப்பாவுக்கும் உரியவாகின்றன.

    வெண்பா உரிச்சீர் நின்று வருஞ்சீர் முதலசை நிரையசையாக அமையுமானால் கலித்தளை தோன்றும். அஃதாவது, காய் முன் நிரை வருவது கலித்தளையைத் தோற்றுவிப்பது என்பது பொருள். காய் முன் நிரை எனவே, ஒன்றாதது என்பது வெளிப்படை (காய் - நேர்).

    நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
    சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
    தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே
    ..... ..... ..... தமிழணங்கே.

    நின்ற சீர்
    வந்த சீர்
    நீராருங்
    கடலுடுத்த
    நீ
    ரா
    ரு ங்
    க ட
    லு டு த்
    நெ
    நெ
    கு ஒ
    கு கு
    கு கு ஒ
    கு
    தனிநெடில்
    தனி நெடில்
    தனிக் குறில் ஒற்று
    இணைக் குறில்
    இணைக் குறில் ஒற்று
    தனிக் குறில்
    நேர்
    நேர்
    நேர்
    நிரை
    நிரை
    நேர்
    தேமாங்காய் (வாய்பாடு)
    கருவிளங்காய் (வாய்பாடு)
    காய் முன் நிரை
    கலித்தளை

    இங்கு, நின்றசீர் `நீராரும்’ என்பது. இது மூவசைச்சீர். காய் என்னும் வாய்பாட்டுச்சொல்லை இறுதியில் கொண்டுள்ள மூவசைச்சீர். காய் ஈற்று மூவசைச்சீர் நான்கும் வெண்பாவுக்குரிய சீர்கள். அஃதாவது வெள்ளையுரிச்சீர்கள் அல்லது வெண்சீர்கள். இவ்வகைச்சீர்கள் முன்னர் நேரசை முதலிய சீர் வந்திருக்குமாயின் வெண்சீர் வெண்டளையாகி ஒன்றிய தளையில் அடங்கியிருக்கும். அவ்வாறு ஒன்றாமல் நிரையசையை முதலாக உடைய சீர் வந்து பந்தப்பட்டதால் கலித்தளை தோன்றியது; ஒன்றாத தளைகளுள் ஒன்றாயிற்று.

    4.3.3 ஒன்றாத வஞ்சித்தளை

    வஞ்சிப்பாவுக்கு உரிமையுற்ற சீர்கள் நான்கு. அவை, `கனி’யென்னும் வாய்பாட்டுச் சொல்லை இறுதியில் கொண்ட மூவசைச்சீர்களாம். இவற்றின் மூன்றாம் அசைகள் நிரையசையால் இறும் (முடியும்). அவை:

    தேமாங்கனி
    புளிமாங்கனி
    கருவிளங்கனி
    கூவிளங்கனி

    என்னும் வாய்பாட்டின.

    வஞ்சி உரிச்சீர் நின்று, வரும் சீர் முதலசை நேராக (நேரசையாக) அமையுமானால் ஒன்றாத வஞ்சித்தளை தோன்றும்.

    மந்தாநிலம் வந்தசைப்ப
    வெண்சாமரை புடைபெயர்தரச்

    இவை வஞ்சிப்பா ஒன்றனது அடிகள். இதனுள் வரும் `மந்தாநிலம்’ என்பது நின்ற சீர்; `வந்தசைப்ப’ என்பது வந்த சீர் ஆகும்.

    நின்ற சீர்
    வந்த சீர்
    மந்தாநிலம்
    வந்தசைப்ப
    ம ந்
    தா
    நி ல ம்
    வ ந்
    த சை ப்
    கு ஒ
    நெ
    கு கு ஒ
    கு ஒ
    கு கு ஒ
    கு
    தனிக் குறில் ஒற்று
    தனி நெடில்
    இணைக் குறில் ஒற்று
    தனிக் குறில் ஒற்று
    இணைக் குறில் ஒற்று
    தனிக் குறில்
    நேர்
    நேர்
    நிரை
    நேர்
    நிரை
    நேர்
    தேமாங்கனி (வாய்பாடு)
    கூவிளங்காய் (வாய்பாடு)
    கனி முன் நேர்
    ஒன்றாத வஞ்சித்தளை

    இங்கு, நின்ற சீர் `மந்தா நிலம்’ என்பதாம். இது, மூவசைச்சீர், அதுவும் `கனி’ என்னும் வாய்பாட்டுச் சொல்லை இறுதியில் உடைய மூவசைச்சீர். கனி என்னும் வாய்பாட்டில் இறும் சீர்கள் நான்கும் வஞ்சியுரிச்சீர் என்பதை மேலே பார்த்தோம். இந்த நிரையசையை இறுதியில் கொண்ட கனி வாய்பாட்டுச் சீர்கள் முன் நிரையசையை முதலாகக் கொண்ட கனி வாய்பாட்டுச் சீர்கள் வரின் ஒன்றிய வஞ்சித்தளை தோன்றும் என்பதை முன்னர்ப் பார்த்தோம். அதுபோல ஒன்றி வராமல் வஞ்சியுரிச்சீர் முன், நேரசையை முதலில் கொண்ட சீர், ஒன்றாமல் வந்துள்ளது. ஒன்றாமல் கனிமுன் நேர் (நிரை முன் நேர்) என்று வருவது ஒன்றாத வஞ்சித் தளையாம்.

    மேற்படித்த செய்திகள் எல்லாமும் சொல்லவந்த காரிகையைக் காண்போம், அது,

    தன்சீர் தன(து) ஒன்றின் தன்தளை
    யாம்;தண வாதவஞ்சி வண்சீர் விகற்பமும் வஞ்சிக்(கு)
    உரித்து;வல் லோர் வகுத்த வெண்சீர் விகற்பம் கலித்தளை
    யாய்விடும்; வெண்டளையாம் ஒண்சீர் அகவல் உரிச்சீர்
    விகற்பமும் ஒண்ணுதலே

    என்பதாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 10-07-2018 15:52:00(இந்திய நேரம்)