Primary tabs
4.4 சீர்களும் அவை தோற்றுவிக்கும் தளைகளும்
முன்பு, நாம், சீர்கள் நான்கு வகைப்படும் என்றும், அவை ஓரசைச் சீராகிய அசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் என்றும் படித்தோம். இப்பெயர்கள் அசையின் எண்ணிக்கையைக் கருதி வைத்த பெயர்கள்.
இவை, வாய்பாடு கருதிப் பெறும் பெயர்கள் கீழ்வருவன:
அசைச்சீர் - நாள், மலர்
ஈரசைச்சீர் - மாச்சீர், விளச்சீர்
மூவசைச்சீர் - காய்ச்சீர், கனிச்சீர்
நாலசைச்சீர் - பூச்சீர், நிழல்சீர்
இவை செய்யுளில், அச்செய்யுளுக்குரிய ஓசையைத் தரும் உரிமை பற்றி எய்தும் பெயர்கள்.
மாச்சீர் விளச்சீர்- இயற்சீர் / அகவல் சீர்காய்ச்சீர்- வெள்ளையுரிச்சீர் / வெண்சீர்கனிச்சீர்- வஞ்சியுரிச்சீர்நாள், மலர் என்னும் வாய்பாட்டு ஓரசைச்சீர், வெண்பாவின் இறுதிச் சீராக வருவது. பூச்சீரும் நிழல் சீரும் அருகி வருவதனை முன்னே பார்த்துள்ளோம்.
இயற்சீரிலிருந்து பிறக்கின்ற தளைகள் நேர் ஒன்றாசிரியத்தளை, நிரையொன்று ஆசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை எனும் மூன்று தளைகள் ஆகும்.
காய்ச்சீராகிய வெண்சீரிலிருந்து பிறக்கின்ற தளை, வெண்சீர் வெண்டளை யாகும். மற்றுக் கலித்தளையும் ஆகும்.
கனிச்சீராகிய வஞ்சிச்சீரிலிருந்து பிறக்கின்ற தளைகள் இரண்டு. அவை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை.
இப்போது உங்களிடம் ஒரு வினா எழும். அது, அசைச்சீரும், பூச்சீரும், நிழல் சீரும் ஆகிய இவை மூன்றிலிருந்து தளைகள் பிறப்பதில்லையா? என்ற வினாவாகக் கூடும். இவ்வினாவுக்கு இனி விடை காண்போம்.
4.4.1 அசைச்சீர்க்குத் தளை காணல்
ஓரசைச்சீர் பெரும்பான்மையும் பாட்டின் இடையில் வராது. ஒரு வேளை ஒரோ வழி வந்துவிட்டால் எவ்வாறு தளை காண்பது? அதற்கும் யாப்பிலக்கணத்தார் வழி வகுத்துள்ளனர். அமிதசாகரர்,
அசைச்சீர் இயற்சீர் ஒக்கும் ஒண்தளைக்கே
என்கின்றார். அசைச்சீரை இயற்சீராகக் கொண்டு தளை காணும் விதத்தைப் பார்ப்போம்.
உரிமை யின்கண் இன்மையால்
அரிமதர் மழைக் கண்ணாள்
செருமதி செய் தீமையால்
பெருமை கொன்ற என்பவேஇது `வஞ்சி விருத்தம்’ என்னும் பாவின வகையைச் சார்ந்த பாடல். இதன்கண் இடையில் `மழை’ என்னும் ஓரசைச்சீரும் `செய்’ என்னும் ஓரசைச்சீரும் பயில்கின்றன. இவ்விடங்களில் ஈரசைச்சீர்கள் வந்திருக்க வேண்டும். கவிஞன் கொள்ளவில்லை. கவிஞர்களுக்கு இவ்வாறு சலுகைகள் உண்டு.
நின்ற சீர்வந்த சீர்மழைக்கண்ணாள்ம ழை க்க ண்ணா ள்கு கு ஒகு ஒநெ ஒஇணைக்குறில் ஒற்றுதனிக்குறில் ஒற்றுதனிநெடில் ஒற்றுநிரை அசைநேர்நேர்விளம் (வாய்பாடு இல்லை)தேமா (வாய்பாடு)இயற்சீர் வெண்டளை(இதற்கு மலர் என்ற வாய்பாடு தருதல் ஆகாது. வெண்பாவின் இறுதியில் வரவில்லை என்பதே காரணம். `அசைச்சீர் இயற்சீர் ஒக்கும்’, என்றதனால் விளச்சீராகக் கொள்ளல் வேண்டும்)
விளமுன் நேர் என வந்து இயற்சீர் வெண்டளை பிறக்கின்றது. இயற்சீராவது, ஒன்றாமையால்தான் என்பதை நினைக.
அடுத்த, அசைச்சீர் `செய்’ என்பது. செய் - நின்ற சீர்; தீமையால் வந்த சீர், இவற்றை அலகிடுவோம்.
நின்ற சீர்வந்த சீர்செய்தீமையால்செ ய்தீமை யா ல்கு ஒநெகு நெ ஒதனிக்குறில் ஒற்றுதனிநெடில்குறில் நெடில் ஒற்றுநேர்நேர்நிரைமா (கொள்ள வேண்டிய வாய்பாடு)கூவிளம் (வாய்பாடு)மா முன் நேர் (நேர் முன் நேர் - ஒன்றுகின்றது)நேரொன்றாசிரியத்தளை`அசைச்சீர் இயற்சீர் ஒக்கும்’ என்ற விதியால், `செய்’ என வந்த நேர் அசைக்கு `மாச்சீர்’ வாய்பாடு தந்தோம். மா முன் நேர் என்ற வகையில் ஒன்றி வந்ததனால் நேரொன்றாசிரியத்தளை பிறந்ததாகக் கொள்கின்றோம்.
ஆக, ஓரசைச்சீரை இயற்சீரேபோலக் கொள்ளல் வேண்டும்; கொண்டு வரும் சீர் முதல் அசையோடு நேராய் ஒன்றியதை நேரொன்றாசிரியத்தளை எனல் வேண்டும் (மா முன் நேர்).
வரும் சீர் முதல் அசையோடு நிரையாய் ஒன்றியதை நிரை ஒன்று ஆசிரியத்தளையாக்கல் வேண்டும் (விளம் முன் நிரை).
வரும் சீர் முதல் அசையோடு ஒன்றாததை இயற்சீர் வெண்டளையாகக் கொள்ளல் வேண்டும் என்பன யாப்பிலக்கணத்தார் கொள்கைகளாம் (மா முன் நிரை).
4.4.2 பூச்சீர்க்குத் தளை காணல்
`பூச்சீர்’ என்றதும் உங்கள் நினைவில் வரவேண்டியன, நாலசைச்சீர் என்பதும் இந்த ஈற்றையுடைய சீர்கள் எட்டு என்பதும்தாம். இச்சீர்கள் அருகி வருவன; வஞ்சிப்பாவில் பெரும்பாலும் பயிலும் என்பன போன்ற செய்திகளை முன்னைய பாடங்களில் படித்துள்ளோம்.
ஆசிரியர் அமிதசாகரர் `கண்ணிய பூவிளம் காய்ச்சீர் அனைய’ என்ற விதியால் பூச்சீர் எட்டனையும் காய்ச்சீராகக் கொள்க என்கின்றார். கொண்டால், வரும் சீர் முதலசையோடு ஒன்றுவது, அதாவது, காய்ச்சீர் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றுவது வெண்சீர் வெண்டளை ஆகக் கொள்ள வேண்டும்.
எ-கா.
வடிவார் கூந்தல் மங்கையரும்
வடிவார்கூந்தல்மங்கையரும்வ டிவா ர்கூ ந்த ல்ம ங்கை யரு ம்இணைக் குறில்நெடில் ஒற்றுநெடில் ஒற்றுதனிக் குறில் ஒற்றுதனிக் குறில் ஒற்றுஇணைக் குறில்தனிக் குறில் ஒற்றுநிரைநேர்நேர்நேர்நேர்நிரைநேர்புளிமாந்தண்பூ(மூவசைச்சீராகக் கொள்ள, வாய்பாடு) புளிமாங்காய்காய் முன் நேர்வெண்சீர் வெண்டளைபூச்சீர் எட்டும் காய்ச்சீராகக் கருதப்படுவதால், கருதிய அக்காய்ச்சீர் நின்று வரும்சீர் முதலசையோடு ஒன்றாதது கலித்தளையாகக் கொளல் வேண்டும்.
எ-கா. `அங்கண்வானத் தமரரசரும்’
அங்கண்வானத்தமரரசரும்அங்கண்வானத்தமரரசரும்நேர்நேர்நேர்நேர்நிரைநிரைநிரைதேமாந்தண்பூ(மூவசைச்சீராகக் கருத வாய்பாடு) தேமாங்காய்காய் முன் நிரைகலித்தளை4.4.3 `நிழல் சீர்’க்குத் தளை காணல்
நிரை ஈற்று நாலசைச்சீர்கள் (பொதுச்சீர்கள்) எட்டு. அவை `நிழல்’ என்னும் வாய்பாட்டுச்சொல்லை இறுதியில் பெறுகின்றன. இவற்றைத்தாம் `நிழல் சீர்’கள் என்கின்றோம். இவை வந்து பயிலும் பாக்களையும், வந்து பயிலப்பெறாத பாக்களையும் முன்னரே கண்டு வந்துள்ளோம். இவை, பயின்றுவரும் என்ற வஞ்சிப்பாவின் சில அடிகளைக் கொண்டு அலகிட்டுத் தளை பிறக்குமாற்றை இனிக் காண்போம்.
தளை காண்பதற்குத் துணை வருவது, அமிதசாகரரின் `கனியொடு ஒக்கும் ஒண்ணிழல்சீர்’ என்னும் தொடரே ஆகும். இதன்பொருள்:
`நிழலென்னும் சொல்லியிறுதியாகிய நிரையீற்றுப் பொதுச் சீர் எட்டும் கனியென்னும் சொல்லிறுதியாகிய வஞ்சி உரிச்சீரே போலக் கொண்டு வரும்சீர் முதலசையோடு ஒன்றினும் ஒன்றாது விடினும் வஞ்சித்தளை என்று வழங்கப்படும்.’
என்பதேயாம்.
அதாவது, `நிழல்’ என்னும் வாய்பாட்டுச்சொல்லை இறுதியில் கொண்டு வரும் நிரையீற்றுப் பொதுச்சீர்கள் (நான்கசைச்சீர்கள்) எட்டு; இவை, எட்டனையும் தளை காணும்போது வஞ்சியுரிச்சீராகப் (கனிச்சீராக) பாவித்துக் கொள்ளல் வேண்டும்; பாவித்துக் கொண்டு, (அ) வஞ்சியுரிச்சீர் நின்று (கனி = நிரை) வரும் சீர் முதலசையோடு (நிரையசையை முதலாகக் கொண்ட) ஒன்றுவதை ஒன்றிய வஞ்சித்தளையாகக் கொள்ளல் வேண்டும்;
(ஆ) வஞ்சியுரிச்சீர் நின்று வரும்சீர் முதலசையோடு ஒன்றாததனை (கனி முன் நேர்) ஒன்றாத வஞ்சித்தளை என்று கொள்ளல் வேண்டும் என்பது பொருள்.
(மக (குழவி) + அத்துக்கை - மகத்துக்கை; இங்கு `மக’ என்பது இயல்பு உயிரீறு.
மகம் + அத்துக் கொண்டான்
மக + அத்துக் கொண்டான் (மக - மகமாகிய நாள்); இங்கு `மக’ என்பது விதி உயிரீறு. மகம் என்பதன் இறுதியெழுத்துக் கெட்டு `மக’ என உயிரீற்றுச்சொல்போல் நின்றதால் விதி உயிரீறு ஆகின்றது, `மக’ என்பது. அதுபோல, நிழல் ஈற்று நாலசைச் சீரை மூவசைக் கனிச்சீராகக் கொள்வதால், `விதி மூவசைச்சீர்’ எனக் கொள்ளலாம்போல் தோன்றுகின்றது).
(அ) எ-கா.
வெங்கண்வினைப்பகை விளிவெய்த
நின்ற சீர்வந்த சீர்வெங்கண்வினைப்பகைவிளிவெய்தவெங்கண்வினைப்பகைவிளிவெய்ததனிக் குறில் ஒற்றுதனிக் குறில் ஒற்றுஇணைக் குறில் ஒற்றுஇணைக் குறில்இணைக் குறில்தனிக் குறில் ஒற்றுதனிக் குறில்நேர்நேர்நிரைநிரைநிரைநேர்நேர்தேமா நறு நிழல் (இயல்பு)தேமாங்கனி (திரிப்பு) (வாய்பாடு)புளிமாங்காய் (வாய்பாடு)கனி முன் நிரை (நிரை)ஒன்றிய வஞ்சித்தளை(ஆ) எ-கா.
அந்தரதுந்துபி நின்றியம்ப
நின்ற சீர்வந்த சீர்அந்தரதுந்துபிநின்றியம்பஅந்தரதுந்துபிநின்றியம்பதனிக் குறில் ஒற்றுஇணைக் குறில்தனிக் குறில் ஒற்றுஇணைக் குறில்தனிக் குறில் ஒற்றுஇணைக் குறில் ஒற்றுதனிக் குறில்நேர்நிரைநேர்நிரைநேர்நிரைநேர்கூவிளந் தண்ணிழல் (இயல்பு)கூவிளங்கனி (திரிப்பு) (வாய்பாடு)கூவிளங்காய் (வாய்பாடு)கனி முன் நேர் (நிரை)ஒன்றாத வஞ்சித்தளை