Primary tabs
-
3)மதுரை வண்டியூர்த் தெப்பக்குள அமைப்பினைக் கூறுக.திருமலை நாயக்கர் கட்டிய வண்டியூர்த் தெப்பக்குளம் தெற்கு வடக்கில் 1000 அடி நீளமும், கிழக்கு மேற்கில் 950 அடி அகலமும், 9.5 லட்சம் சதுர அடிப்பரப்பும் கொண்டது. குளத்தைச் சுற்றிக் கருங்கல்லால் 4 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் அமைந்துள்ளது; 5 அடி அகலத்தில் தளவரிசையும் உண்டு.
குளத்தின் நடுவே நீராழி மண்டபம் இயற்கையெழில் சூழ்ந்தது; மண்டபத்தின் நிழல் வெளிப்புறம் சாயாமல் மண்டபத்திலேயே அடங்குமாறு கட்டடக் கலை நுட்பம் வாய்ந்தது இந்த மைய மண்டபம்.