Primary tabs
-
2.9 தொகுப்புரை
உலக நாடுகள் பலவற்றிலும் அரசர்கள் தமது பாதுகாப்புக்காகக் கோட்டை கட்டி வாழ்ந்துள்ளனர் ; அந்நிலையில் தமிழ் நாட்டிலே பண்டைக் காலத்திலே மன்னர்கள் கட்டிய கோட்டைகள் மக்களுக்கும் பயன்பட்டன என்பது குறிக்கப்படுகின்றது.
பூம்புகாரில் வெளிநாட்டவரும் உள்நாட்டவரும் கலந்து இனிது வாழுவதற்கு உரிய மாடமாளிகைகளும், தெய்வக் கோட்டங்களும் ஐவகை மன்றங்களும் நாட்டுக்கு நலம் நாடும் பாங்கில் உள்ளவை என்பது தெரிகின்றது. ஆடற்கலையும் ஓங்கும் சூழல் உள்ளது.
பூம்புகாரைப் போலவே காஞ்சிபுரமும் சமயம் சமுதாயம் ஆகிய இருவகைச் சிறப்புகளும் உடையது ; இவ்விரு நகரங்களும் ஒப்பிட்டு நோக்குதற்கு உரியன.
நாட்டுவளத்திற்கான நீர் ஆதாரத்தை உயிர்க் கடமையாகக் கொண்டு போற்றிய அரசாங்கக் கடமை சுட்டப்படுகிறது.
எவ்வளவு சிறப்பாக நாடு நலமுடனிருப்பினும், சிறைச்சாலை ஒருவகைப் பின்னடைவைக் காட்டும் அடையாளமே.
பௌத்தர்கள், சமணர்கள், கிறித்துவர்கள், இசுலாமியர்கள் தத்தம் வழிபாட்டு இடங்களை எவ்வாறு போற்றி வருகின்றனர் என்பது தெரிய வந்தது.
தமிழ்நாடு பல சமயங்களும் கலந்துறவாடும் சூழலைப் பல நிலைகளில் பெற்றுள்ளது என்பது நன்கு விளக்கம் பெற்றுள்ளது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II