Primary tabs
-
அருணாசலக்கவிராயர் இயற்றிய மிகப் பிரபலமான ஒரு கீர்த்தனையின் பல்லவியை முதலில் கேட்போம்.
இராகம் : பைரவி தாளம் : ஆதி
பல்லவி
யாரோ இவர் யாரோ என்ன
பேரோ அறியேனேஇப்பாடல் அருணாசலக் கவிராயர் இயற்றிய இராமாடகக் கீர்த்தனை என்னும் நூலில் இடம்பெறும் ஒரு கீர்த்தனை. இராமபிரானின் சரித்திரத்தை ஓர் இசை நாடகமாக எழுதியவர் அருணாசலக் கவிராயர். தமிழில் கீர்த்தனைகள் பாடிய முதல் மூவரில் ஒருவரான அருணாசலக் கவிராயர் வாழ்க்கைப் பின்னணியை இப்பொழுது பார்ப்போம்.
4.2.1 வாழ்க்கைப் பின்னணியும் இசைத்திறனும்
அருணாசலக் கவிராயர் கி.பி.1711 இல் தில்லையாடி என்னும் ஊரில் பிறந்தார், கார்காத்த வளோளர் குலத்தவரான நல்லத் தம்பிப்பிள்ளை - வள்ளியம்மை ஆகியோரின் நான்காவது புதல்வர். இளமையில் கவிபாடும் புலமை மிக்கவர். பாடல்களை இசையுடன் பாடும் ஆற்றல் பெற்றவர். நூற்பயன்களை இசையுடன் சொற்பொழிவாற்றும் திறமை மிக்கவர்.
அருணாசலக் கவிராயரின் பல்புலமைத் திறன்களைத் தருமபுர ஆதீனத் தலைவர் பெரிதும் மதித்தார். எனவே கவிராயரைச் சீர்காழிக்கு அழைத்தார்.
குடும்பத்தோடு சீர்காழியில் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தார். சீர்காழியில் வாழ்ந்ததால் சீர்காழி அருணாசலக் கவிராயர் என்று அழைக்கப் பெற்றார். பல மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார். பல நூல்களை இயற்றினார். இவற்றுள் இராம நாடகக் கீர்த்தனை நூல் இவருக்கு அழியாப் புகழைக் கொடுத்தது. கி.பி.1779 ஆம் ஆண்டு தமது 67வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அசோமுகி நாடகம், சீர்காழித் தலபுராணம், சீர்காழிக் கோவை, அநுமார் பிள்ளைத் தமிழ், இராம நாடகக் கீர்த்தனை ஆகியவை கவிராயரது படைப்புகள், இவற்றுள் இசைப் பாடல்களால் இனிய இராகங்களில் ஓர் இசை நாடக நூலாக, "இராம நாடகக் கீர்த்தனை" விளங்குகிறது.
- அரங்கேற்றம்
இராமாயணக் கதையை வால்மீகி சமஸ்கிருதத்தில் இயற்றினார். கம்பர் தமிழ்மொழியில் பாடினார். அருணாசலக் கவிராயர் 258 இசைப்பாடல்களில் இராம நாடகத்தை வடிவமைத்தார். கீர்த்தனைகளால் தமிழில் முதன்முதலில் இசைநாடகம் படைத்தார்.
ஒரு கதையைச் சுவையாக மக்களுக்குச் சொல்வதற்குக் கீர்த்தனைகள் ஏற்றன என்பதை நிறுவிக் காண்பித்தார்.
கம்பரது இராமாயணம் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் அரங்கேற்றப் பட்டது. அதே போல் அருணாசலக் கவிராயரது இராமநாடகக் கீர்த்தனையும் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் அரங்கேறியது.
மக்கள் இராம நாடகக் கீர்த்தனைகளைக் கேட்டு மகிழ்ந்தனர். அருணாசலக் கவிராயருக்கு "இராமாயணக் கவிஞன்" என்று பட்டம் வழங்கிப் பாராட்டினர். "இராம நாடகக் கீர்த்தனை" என்னும் நூல் பின்னர் "இராம நாடகம்" என்றும், "சங்கீத இராமாயணம்" என்றும் அழைக்கப்பட்டது.
"இராம நாடகக் கீர்த்தனை" என்ற நூல் பல பதிப்புகளில் வெளிவந்தது. தோடி, மோகனம், பைரவி, ஆனந்தபைரவி, சங்கராபரணம் ஆகிய பழமையான இராகங்களில் அமைந்த கீர்த்தனைகள் பிரபலமாயின. மங்களகைசிகம், சைந்தவி, துவிஜாவந்தி ஆகிய அபூர்வ இராகங்களிலும் இராமநாடகக் கீர்த்தனைகள் பாடப்பெற்றன. இக்கால இசைக் கச்சேரிகளிலும் நாட்டியக் கச்சேரிகளிலும் ஒரு சில இராம நாடகக் கீர்த்தனைகள் பாடப்பெறுகின்றன. அவற்றின் விவரங்களை இங்குக் காணலாம்.
பாடல் தொடக்கம்இராகம்தாளம்1.யாரோ என்றெண்ணாமலேசங்கராபரணம்ஆதி2.யாரோ இவர் யாரோபைரவிஆதி3.ராமனுக்கு மன்னன்இந்தோளம்ஆதி4.யாரென்று ராகவனையதுகுலகாம்போதிஆதி5.ஸ்ரீராம சந்திரனுக்குமத்தியமாவதிஆதி6.எனக்குன்இருஇராகமாலிகைஆதி7.ஏன் பள்ளி கொண்டீர்மோகனம்ஆதிஒலி நாடா மூலம் "யாரோ இவர் யாரோ" என்ற கீர்த்தனை எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியால் மிகப் பிரபலமடைந்தது. "எனக்குன்இருபதம்" என்ற கீர்த்தனையை இராகமாலிகையில் பாடிப் பிரபலப்படுத்தினார் டி.கே.பட்டம்மாள், "இராமனுக்கு மன்னன்" என்ற கீர்த்தனை திரைநடிகையும் பாடகியுமான பானுமதியால் பிரபலமடைந்தது. இராம நாடகக் கீர்த்தனை நூலை அரங்கேற்றுவதற்கு முன் அருணாசலக் கவிராயர் ஸ்ரீரங்கநாத சுவாமிகள் மேல் "ஏன் பள்ளி கொண்டீர்" என்ற கீர்த்தனையைப் பாடினார். என்.சி. வசந்தகோகிலம் பாடிய ஒலிநாடாவால் இப்பாடல் பிரபலமடைந்தது.