தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

 • 1.6 தொகுப்புரை

  நண்பர்களே! இதுவரை, கவியரசு என்று போற்றப்படும் கண்ணதாசனின் கவிதைகள் பற்றிய சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை அறிந்துகொண்டீர்கள் என்று மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்:

  • கண்ணதாசன் என்னும் கவிஞர் பற்றிப் பொதுவாக அறிந்து கொள்ள முடிந்தது.
  • அவரது கவிதைகள் பற்றியும், அவற்றின் இலக்கியச் சிறப்புக்குக் காரணமான எளிமை, இனிமை, தெளிவு பற்றியும் தெரிந்துகொள்ள முடிந்தது. சொல்லாட்சி, உவமை, உருவகம் போன்றவை எவ்வாறு அமைந்துள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
  • துன்பம், காதல் போன்ற சுவைகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. கவிதைகளில் உள்ள தத்துவக் கருத்துகள், ஆன்மிக வெளிப்பாடுகள் பற்றியும் ஓரளவு தெரிந்து கொள்ளமுடிந்தது.
  • உள்ளத்தை ஒளித்து வைக்காமல் உலகத்துக்குக் காட்டி வாழ்ந்த ஓர் உயர்ந்த கவிஞர் கண்ணதாசன் என்று புரிந்துகொள்ள முடிந்தது.
  1)

  கண்ணதாசனின் கவிதைகள் படிப்பவர் மனம் கவருவதற்கு இரு காரணங்கள் கூறுக.

  2)
  சுடுகாட்டு எலும்புகளைச் சோதித்த கவிஞர் கண்ட உண்மை யாது?
  3)
  பினாங்கு நகரில் வாழும் மூன்று இனங்களின் ஒற்றுமைக்கு உவமையாகக் கூறப்படுவது எது?
  4)
  வாழ்வே போராட்டம் ஆகிவிட்டவனுடைய தாயகம், தாய்மொழி எவை எனக் கண்ணதாசன் காட்டுகிறார்?
  5)
  தென்றலின் இயக்கத்தைக் கவிஞர் உருவகம் செய்வது எவ்வாறு?

  6)

  கண்ணதாசனின் கவிதை உள்ளடக்கத்தில் காணப்படும் முரண்பாடுகளுக்குக் காரணம் என்ன?

  நூல்களின் பட்டியல்


  1. கண்ணதாசன் கவிதைகள் - முதல் இரண்டு தொகுதிகள்
  2. கண்ணதாசன் கவிதைகள் - 3 ஆவது தொகுதி
  3. கண்ணதாசன் கவிதைகள் - 4 ஆவது தொகுதி
  4. கண்ணதாசன் கவிதைகள் - 5 ஆவது தொகுதி
  5. கண்ணதாசன் கவிதைகள் - 6 ஆவது தொகுதி
  6. மாங்கனி
  7. ஆட்டனத்தி ஆதிமந்தி
  8. கண்ணதாசன் திரைஇசைப்பாடல்கள்

  வெளியீட்டாளர்

  வானதி பதிப்பகம்
  13, தீனதயாளு தெரு
  தியாகராயர் நகர்
  சென்னை - 600 017.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 10:57:49(இந்திய நேரம்)