Primary tabs
-
1)இறைமைக் குணம் என்று காரைக்காலம்மையார் எதனைக் குறிப்பிடுகிறார்?
இறைவன் உயிர்கள் மாட்டு வைத்துள்ளது இரக்கம். இறைவன் இரவில் ஈமக் காட்டினில் நின்று ஆடுவதன் தத்துவம் யாது? உயிர்கள் ஆணவ இருளில் மூழ்கித் தங்கள் நிலை தெரியாது கிடக்கும் போது அவைகளை விட்டு இறைவன் பிரியாது நின்று, அவைகளைச் செந்நெறிப்படுத்தி இயக்க வேண்டியே இருளில் ஒளியாய் நின்று ஆடுகின்றான். இதுவே ஆட்டத்தின் தத்துவம் மற்றும் விளக்கம் ஆகும். இதுவே இறைமைக் குணம்.