Primary tabs
-
2)திருவருள் திறம் யாது?
சிவபெருமான் அன்பிற்கு அடிபணிவான். செருக்குற்றவரைச் சீறி அழிப்பான். அடியவரைக் காக்கும் பொருட்டு எதனையும் செய்யும் அருள் மிக்கவன். இருபது தோள்களை உடைய இராவணன் சிவபக்தன்; இசைக் கலைஞன். தன் இசைத் திறத்தால் இறைவனையே தன் வசப்படுத்தும் ஆற்றல் மிக்கவன். அப்படிப்பட்ட இராவணனும் செருக்குற்ற போது இறைவன் அவனைத் தண்டித்தான். அடியும், முடியும் காண மாட்டாது அரற்றிய திருமாலும் பிரமனும் சிவன் பெருமை உணர்ந்து அவனை மகிழ்ந்தேத்தினர். காலம் தவறாது உயிர்களைக் கொள்ளும் எமன் மார்க்கண்டேயன் உயிரை எடுக்க முற்பட்டான். தன்னையே சரண் அடைந்த மார்க்கண்டேயனுக்காக எமனையே உதைத்த கால்களை உடையவன். சிவபெருமானின் திருவருள் திறம் மீளாப் பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவுவது