Primary tabs
-
3)பாரதிதாசன் நூல்களில் சிலவற்றைக் கூறுக
பெண் கல்வியைக் குடும்ப விளக்கிலும், புதிய உலகத்தைப் பாண்டியன் பரிசிலும், இயற்கை அழகை அழகின் சிரிப்பிலும் நயம்பட மொழிகிறார். புரட்சிக்கவியில் காதலும் வீரமும் வெளிப்படக் காணலாம். மணிமேகலை வெண்பாவில் மணிமேகலையைச் சமூகச் சீர்திருத்த வாதியாகக் காட்டுகிறார். எதிர்பாராத முத்தம், குறிஞ்சித்திட்டு முதலிய காப்பியங்களையும், சௌமியன், சேர தாண்டவம், நல்ல தீர்ப்பு, பிசிராந்தையார் ஆகிய நாடகங்களையும் இயற்றியுள்ளார்.