Primary tabs
-
5.6 தொகுப்புரை
நண்பர்களே! இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.
பாலைத் திணையின் முதற்பொருள். கருப்பொருள், உரிப்பொருள் எவை என அறிந்துகொள்ள முடிந்தது. இம்மூன்று பொருள்களும் பாடல்களில் வெளிப்படும் முறை பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.
உடன்போக்கு, செலவு அழுங்குவித்தல், நற்றாய் வருந்துதல், செவிலி மகளைத் தேடிச் செல்லல், தலைவியை ஆற்றுவித்தல் போன்ற அக நிகழ்வுகளையும், கொள்ளை அடித்தல், அறம் பாராட்டல் போன்ற பிற இயல்புகளையும் அறிந்து கொள்ள முடிந்தது.
பாலைத்திணைப் பாடல்களில் காணப்படும் கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை ஆகிய இலக்கிய நயங்களைப் புரிந்து சுவைக்க முடிந்தது.