Primary tabs
-
3.0 பாட முன்னுரை
ஒரு மொழியின் வளர்ச்சிக்குச் சொல்லாக்கம் அடிப்படையானது. ஒலிபெயர்த்தும் புதிய சொற்களைப் படைத்தும், பழஞ்சொற்களுக்குப் புதுக் கருத்தினைத் தந்தும் சொல்லாக்கம் நடைபெறுகின்றது. இதனால் அறிவியல் தமிழுடன் சொல்லாக்கமும் வளர்ச்சியடைந்துள்ளது. தமிழில் உள்ள சொல்லாக்க வகைகளை அறிந்து கொள்ளும் வகையில் இந்தப் பாடப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.