Primary tabs
-
3.1 சொல்லாக்க வகைப்பாடு
சொல்லாக்க முயற்சியில் பல்வேறு முறைகள் வழக்கிலுள்ளன. எனினும் சொல்லாக்கத்தினைப் பின்வரும் வகைகளில் பகுக்கலாம்.
(1) கூட்டாக்கம்
(2) முன்னொட்டாக்கம்
(3) பின்னொட்டாக்கம்
(4) மாற்றம்
(5) பின்னாக்கம்
(6) கத்தரிப்பாக்கம்
(7) கலப்பாக்கம்
(8) தலைப்பெழுத்தாக்கம்
(9) சொல் உருவாக்கம்கூட்டாக்கம் என்பது மரபிலக்கணப்படி தொகையாக்கம் ஆகும். தொடர்களால் கூட்டாக்கம் செயற்படும் அடிப்படையில் பெயர்கள், வினைகள், பெயரடைகள், வினையடைகள் என்று வகைப்படுத்தலாம். தமிழில் பெரும்பான்மையான கூட்டாக்கங்களும் பெயர்களாகும். அதற்கு அடுத்த படியாக வினைகள் அமையும். இரண்டிற்குக் கூடுதலான சொற்களை உடைய கூட்டாக்கங்களை ஈரிணையான கூட்டாக்கங்கள் எனப் பகுக்கலாம்.
- கூட்டுப் பெயர்கள்
பெரிய அளவிலான கூட்டாக்கங்கள் பெயரும் பெயரும் இணைந்த உள்வகைப்பாடாகும். பொதுப்பெயர் + பொதுப்பெயர் இணைந்த கூட்டாக்கம் எல்லாவற்றிலும், விளைவாக்கம் மிகுந்துள்ளது. இச்சொல்லாக்கம் இதழ்கள், அகராதிகளில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. கூட்டாக வரும் சொற்களிடையே உறவுகள் பலவிதமாக அமையும்.
எடுத்துக்காட்டு: (பொதுப்பெயர் + பொதுப்பெயர்)
ஒளிப் பேழை, வெற்றி வாள், பயணச் சீட்டு, தீப்பெட்டி, குருவிக் கூடு, சாதிக் கலவரம், கள்ளக் காதலி.
மதக் கலவரம், நுழைவுக் கட்டணம், பகல் நிலா
சிறப்புப் பெயர் + பொதுப் பெயர் அமைந்திடும் கூட்டுகளில், சொற்களுக்கிடையில் பலவிதமான உறவுகள் காணப்படுகின்றன.
எடுத்துக்காட்டு:
அண்ணா நகர்
காந்தி வழி, பாரதி நடை, திரு.வி.க. நடை- வினை + பெயர் > பெயர்
இத்தகைய சொல்லாக்கத்தில், பெயர், முன்னால் அமைந்துள்ள வினையடிகளுக்கு எழுவாய் அல்லது செயப்படுபொருளாக வரும். பிற உறவுகளிலும் வரும். இக்கூட்டுகளில் தலைப்பாக வரும் பெயர்கள் எழுவாய் அல்லது செயப்படுபொருள் அல்லது பிற உறவிலோ வரும்.
எடுத்துக்காட்டு:
சுடுகாடு இதில் சுடு - வினை, காடு - பெயர், இரண்டும் இணைந்து புதுப் பொருள் தருகின்றன.
ஊறுகாய், வெட்டுகத்தி, தொற்றுநோய்
- பெயர் + வினை = வினை
பெயரும் வினையும் சேர்ந்து பெயராக அமையும் கூட்டுகள் தமிழில் விளைவாக்கம் பெறவில்லை. தாலிகட்டு, கால்கட்டு ஆகிய சொற்களில் வரும் கட்டு என்ற தலைப்புச் சொல்லை வினையாகவும் வினையடிப் பெயராகவும் கொள்ளலாம்.
- பெயரடை + பெயர் = பெயர்
மறுமணம், புன்சிரிப்பு, சின்னவீடு போன்றன பெயரடை + பெயர் என்ற கூட்டாக்கத்தில், மாதிரி எடுத்துக்காட்டுகளாக உள்ளன. இவை பொருளைத் தருவதுடன், தலைப்புப் பெயரின் ஒரு பிரிவாகவும் பொருள் மாற்றம் பெறுவதால், இத்தகைய ஆக்கங்களைக் கூட்டாக்கமாகக் கொள்வது பொருத்தமுடையது.
எடுத்துக்காட்டு
மறுமணம், புன்சிரிப்பு, சின்னவீடு.
- இரட்டைக் கூட்டுப் பெயர்கள்
பெயர்களே இரட்டித்து வருவதுண்டு. இதில் இரண்டாவது பெயரில் முதல் எழுத்து வேறுபடும். அதனால் இரட்டிப்பது போன்று இல்லாமல், ஒலிக்குறிப்புப் போல் அமைந்து, பொருள் தரும். இவ்வமைப்பு, குறிப்பிட்ட ஒன்று என்று இல்லாமல் ‘ஏதோ ஒன்று’ என்ற உணர்வை உண்டாக்கும். இதில் ஒருவிதமான ஒழுங்கமைப்பு உள்ளது.
எடுத்துக்காட்டு:
புலி கிலி, சம்பளம் கிம்பளம், ஆளு கீளு. அரிசி கிரிசி
இவற்றில் புலி, அரிசி என்று குறிப்பாகச் சொல்லாது, அதுபோல வேறு ஒன்று என்று பொருள் தருவதைக் காணலாம்.
- கூட்டு வினைகள்
பல பெயர்ச் சொற்கள் சில பொது வினைகளுடன் சேர்ந்து வினையாக்கம் பெறுகின்றன. இவ்வாக்கம் விளைவாக்கம் மிக்கது.
ஆடு
எடுத்துக்காட்டு: நடனமாடு
இடு
எடுத்துக்காட்டு: ஊளையிடு
அடி
எடுத்துக்காட்டு: மொட்டையடி
விடு
எடுத்துக்காட்டு: மூச்சுவிடு
உறுத்து
எடுத்துக்காட்டு: பயமுறுத்து
செய்
எடுத்துக்காட்டு: வேடிக்கை செய்
சொல்
எடுத்துக்காட்டு: புகார் சொல்
- வினை + வினை = வினை
இத்தகைய கூட்டு வினைகளின் முதல் வினைப்பகுதிகள் வினையடியாகவோ, வினை எச்சப் பகுதியாகவோ அமையலாம். வினையடி வினைக் கூட்டுகள் மிகக்குறைவே. அவற்றில் வரும் வினையடியைத் தொழிற்பெயராகவும் கருதலாம்.
எடுத்துக்காட்டு:
ஒப்புக் கொள், சொல்லிக் கொடு, ஆறப்போடு, தள்ளி நில், தூக்கியெறி.
இதில் ஒப்பு என்பது வினையடி; மற்றொரு வினையோடு சேர்கிறது. சொல்லி என்பது வினையெச்சம். இது வேறொரு வினையோடு சேர்கிறது.
- கூட்டுப் பெயரடைகள்
இது பரவலான கூட்டுப் பெயரடைகளின் வகையாகும். இதில் வேறுபாடு மிக்க பல பொருண்மை உள்வகைகள் உண்டு.
எடுத்துக்காட்டு:
கிளிப்பச்சை (வண்ணம்)
இலைப் பச்சை (சேலை)வடிவ அடிப்படையில் மேற்குறிப்பிட்ட சான்றுகளை பெயர் + பெயர் > பெயரடை என்று கருதலாம். இத்தகைய கூட்டுகள் பெயரடையாக வந்தாலும் இவற்றின் தலைப்புச் சொல் பெயரடையல்ல.
- கூட்டு வினையடைகள்
ஒரு கூட்டுப் பெயரின் முன் வினையடைப் பின்னொட்டுகளான ஆக, ஓடு, இல் போன்றன சேரும்போது கூட்டு வினையாக்கம் நடைபெறும்.
எடுத்துக்காட்டு:
அசுர வேகத்தில், ஏற்ற இறக்கத்தோடு
இவை தவிர இசைக்காக அடுக்கி அல்லது இரட்டித்து வரும் கூட்டு வினையடைகளும் உண்டு.
எடுத்துக்காட்டு:
தெள்ளத்தெளிவாக, விறுவிறுப்பாக, சுறுசுறுப்பாக,
கருகருவென, கலகலவென்று.பண்டைத் தமிழில் முன்னொட்டாக்கம் பெரிய அளவில் இல்லை. இன்று தமிழில் ஆங்கிலத்தினைப் போல முன்னொட்டாக்கம் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இத்தகைய சொற்களில் ஒற்றுமை காண்பதும் அவற்றைச் சொல்லாக்கத்தில் பயன்படுத்துவதும் அடிப்படையாக அமைந்துள்ளன.
எடுத்துக்காட்டு:
அ + தர்மம் = அதர்மம்
அ + நாகரிகம் = அநாகரிகம்- முன்னொட்டு (Prefix)
Tele-phone-தொலை-பேசிTele-printer-தொலை-அச்சுTele-vision-தொலை-காட்சி = தொலை(க்)காட்சிTele-gram-தொலை-வரிTele-scope-தொலை-நோக்கிTele-communication-தொலை-தொடர்பு = தொலை(த்)தொடர்புதமிழில் பின்னொட்டாக்கம் பரவலாகக் காணப்படும் சொல்லாக்க முறையாகும். பல பின்னொட்டுகள் தமிழில் பயன்படுத்தப்படுகின்றன.
- உயர்திணைப் பெயராக்கம்
காரன், ஆளன், ஈனன், சீலன், சந்தன், வந்தன் என்பன ஆண்பால் ஒருமைப் பேரொட்டுகளாகவும், காரி, ஆட்டி, வதி என்பன பெண்பால் ஒருமைப் பேரொட்டுகளாகவும், ஆள், ஆளி, சாலி, வாதி, மானி, மான், தாரி, ஏறி என்பன இருபாலுக்கும் பொதுவான பேரொட்டுக்களாகவும் காரர், ஆளர், சீலர், வந்தர் என்பன உயர்வு ஒருமைப் பேரொட்டுகளாகவும் இணைந்து பெயராக்கம் செய்கின்றன.
எடுத்துக்காட்டு:வேலைக்காரன், வேலைக்காரி, வேலைக்காரர்,
பலவீனன்,
தனவந்தன், மணவாட்டி, தனவந்தர்
சத்திய சீலன், குணவதி, சத்தியசீலர்.
சத்திய சந்தன், சத்தியசந்தர்,
வேலையாள், தொழிலாளி, முதலாளி, செலவாளி,
திறமைசாலி, பலசாலி,
தேசியவாதி, அரசியல்வாதி, தேசாபிமானி,
பலவான், தனவான், குணவான்,
வேடதாரி, மரமேறி, பனையேறி -இவை போன்றவை இந்த வகையில் அமையும்.
- தொழிற் பெயராக்கம்
தல், த்தல் போன்ற ஒட்டுகள் துணைநிலை வருகை முறையில் வினைப் பகுதிகளுடன் இணைந்து தொழிற் பெயராக்கம் செய்கின்றன.
எடுத்துக்காட்டு:அழு+ தல் > அழுதல்
கெடு + த்தல் > கெடுத்தல்
படு + த்தல் = படுத்தல்
நடி + த்தல் = நடித்தல்
- வினையடிப் பெயராக்கம்
க்கை, கை என்ற ஒட்டுகள் வினையடிகளுடன் துணைநிலை வருகை முறையில் வினைப்பகுதிகளுடன் இணைந்து தொழிற் பெயராக்கம் செய்கின்றன.
எடுத்துக்காட்டு:செய் + கை > செய்கை
வாழ் + க்கை > வாழ்க்கைஇதே போன்று பிற ஒட்டுகள் வினையடிகளுடன் துணைநிலை வருகை முறையில் வினையுடன் இணைந்து தொழிற்பெயராக்கம் செய்கின்றன. அவற்றின் சான்றுகள் பின்வருமாறு:
வாழ் + வு>வாழ்வுபடி + ப்பு>படிப்புபோ + க்கு>போக்குஆடு + அல்>ஆடல்வளர் + ச்சி>வளர்ச்சிமுடி + ச்சு>முடிச்சுகல் + வி>கல்வி- வேர்ச் சொற்களிலிருந்து பெயர்கள்
மரபிலக்கணம் நிறம், சுவை, வடிவம், அளவு என்று நான்கு வகைப் பண்புப்பெயர்களையும் அவற்றின் விகுதிகளையும் தந்துள்ளது. அவை பின்வருமாறு:
நன்மை : மை
தொல்லை: ஐ
மாட்சி : சி
மாண்பு : பு
நலம் : அம்
நன்று : றுபண்புப் பெயர் விகுதிகள் வரும் பகுதிகள் எந்தச் சொல் வகையினைச் சார்ந்தவை என்பது தெளிவாக இல்லை. எனவே இவற்றை வேர்ச்சொற்கள் என்று மொழியியலாளர் கருதுகின்றனர். எனவே பண்புப்பெயர் விகுதிகளை ஒட்டுகளாகப் பகுதிகளிலிருந்து பிரித்துப் பார்ப்பது பொருத்தமற்றது என்று தோன்றினாலும் சொற்களின் பொருள் தொடர்புகளைச் சொல்லாக்கங்கள் மூலம் தொடர்புப்படுத்திக்காட்டுவது ஏற்புடையதாகத் தோன்றுகிறது.
எடுத்துக்காட்டு:
ஒர்-ஒர்வர்.
ஒரு-ஒருத்தி
பெரு-பெரியோர்.
- பெயர்களிலிருந்து பெயரடையாக்கம்
பெயரடைகளைத் தமிழில் ஒரு சொல் வகையாக ஏற்றுக் கொள்வதில் மொழியியலாளரிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும் தற்காலத் தமிழுக்குப் பெயரடை மறுக்க இயலாத சொல் வகையாகும்.
ஆன, உள்ள என்ற பேரொட்டுகள் பெயர்களுடன் சேர்ந்து பெயரடையாக்கம் செய்கின்றன.
எடுத்துக்காட்டு:அழகு + ஆன > அழகான
சத்து + உள்ள > சத்துள்ள
முத்து + ஆன > முத்தானஆம், ஆவது என்ற பேரொட்டுகள் எண்ணுப் பெயர்களுடன் சேர்ந்து பெயரடையாக்கம் செய்கின்றன.
எடுத்துக்காட்டு:ஒன்று + ஆம் > ஒன்றாம்
மூன்று + ஆவது > மூன்றாவது
நூறு + ஆவது > நூறாவது
பின்னொட்டாக்கம் காரணமாக உருவாகும் சொல்லாக்கம் எண்ணிக்கையில் மிகவும் அதிகம். எல்லாவற்றையும் இந்தப் பாடப் பகுதியில் சேர்க்கவில்லை. சில முக்கியமான பின்னொட்டாக்கம் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன.