Primary tabs
-
3.4 கத்தரிப்பாக்கம்
ஒரு அகராதிச் சொல் வடிவில் குறுகி, அதே சமயம் அதன் பொருண்மையும் வடிவ வகுப்பும் மாறாது வருவது கத்தரிப்பாக்கமாகும்.
எடுத்துக்காட்டு: Pornography > porn
தமிழில் இந்த மாதிரிக் கத்தரிப்பாக்கங்கள் இல்லையென்றாலும் எளிமை கருதிய பல ஆக்கங்களைக் காணலாம்.
எடுத்துக்காட்டு:கோட்ட ஆட்சித் தலைவர்>கோட்டாட்சியர்ஆட்சியாளர்>ஆட்சியர்செயலாளர்>செயலர்முதலமைச்சர்>முதல்வர்பொருளாளர்>பொருளர்உயிரினங்கள்>உயிரிஇடப்பெயர்களும் ஒருவிதக் கத்திரிப்பாக்கம் பெறுகின்றன.
எடுத்துக்காட்டு:கோயம்புத்தூர்>கோவைபுதுச்சேரி>புதுவைஅம்பாசமுத்திரம்>அம்பைபுதுக்கோட்டை>புதுகைதிருநெல்வேலி>நெல்லைநாகப்பட்டினம்>நாகை