Primary tabs
-
3.7 சொல் உருவாக்கம்
எவ்வித உருபனியல், ஒலியனியல் அல்லது எழுத்தியல் காரணமும் இல்லாமல் சொற்களை உருவாக்குதல் சொல் உருவாக்கமாகும். ஆங்கிலச் சொல் Kodak என்பது இத்தகைய சொல் உருவாக்கமாகும். இவ்வகை பெரும்பாலும் தமிழில் இல்லை என்று கூறலாம். பெரும்பாலும் வணிக நிறுவனங்கள் தங்களுடைய பொருளின் பெயரைப் பரவலாக்கிடப் புதிய சொற்களை உருவாக்குகின்றன. ஃபிலிம் நிறுவனமொன்று தனது விற்பனைப் பொருளுக்கு Kodak என்று பெயர் தந்துள்ளது. இச்சொல்லுக்கு எவ்விதப் பொருண்மையும் இல்லை.
3.7.1 கடன் நீட்சிமொழியில் ஏற்கனவே உள்ள சொல்லுக்குப் புதிய பொருள் கற்பித்தல் கடன் நீட்சி எனப்படுகிறது. அதாவது மொழியிலிருந்து கடன்பெறும் சொல்லை வேற்றுமொழிச் சொல்லுக்கு நிகரனாக்குதல்.
(எ.கா)Board>வாரியம்Nurse>செவிலிDivision>கோட்டம்Matron>மூதாய்