தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

6.3 இதழியல் சுதந்திரத்திற்கான தடைகள்

  • 6.3 இதழியல் சுதந்திரத்திற்கான தடைகள்

    இதழ்கள் சுதந்திரமாகச் செயல்படுவதற்குச் சில நடைமுறைத் தடைகள் உள்ளன. அவற்றை இதழாளர்கள் அகத்தடை, புறத்தடை எனப் பகுத்து உரைப்பர்.

    6.3.1 அகத்தடைகள்

    இதழ்களின் சுதந்திரத்திற்கு இதழ்களின் அமைப்புக்குள்ளும், செயல்படும் முறைகளிலும் நேரிடும் தடைகள் அகத்தடைகள் எனப்படுகின்றன. அவை வருமாறு:

    • பொருளாதாரச் சுதந்திரம்
    • பொருளாதாரச் சுதந்திரம் இன்றி, பிறரைச் சார்ந்திருக்கும் இதழ்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியாது.

    • கொள்கைப் பிடிப்பின்மை
    • தனக்கெனத் தனித்த கொள்கை இன்றி இலாப நோக்கில் செயல்படுவது. அரசியல் செல்வாக்கு, தொழிலதிபர்கள் ஆதரவு, ஆதிக்க பலமுடையவர்களின் அதிகாரம் முதலியவற்றால் கொள்கைப் பிடிப்பின்றிச் செயல்படுவது.

    • ஆசிரியருக்குக் கட்டுப்பாடு
    • பெரிய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றுபவர்களுக்கு நிர்வாகத்தால் ஏற்படும் கட்டுப்பாடு.

    • இதழ்களின் உடைமை முறை
    • இதழ்கள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் உடைமையாக இருக்குமானால் முதலாளிகளின் விருப்பப்படிதான் இதழ்கள் செயல்பட முடியும். உண்மையான கருத்துகள் மறைக்கப்படலாம்.

    • இதழாளர் சங்கம்
    • வலுவாக அமைந்துவிட்ட இதழாளர் சங்கங்கள் இதழ்களின் செயல்பாடுகளில் தலையிடுவது.

      6.3.2 புறத்தடைகள்

      இதழ்களுக்கு வெளியிலிருந்து வரும் தடைகளைப் புறத்தடைகள் என்பர். அவை வருமாறு :

    • விளம்பரங்கள்
    • விளம்பரங்கள் இதழ்களுக்கு வருவாய் தரும் மூலங்களாகும். விளம்பரம் தரும் விளம்பரதாரர்கள் தமது செல்வாக்கால் இதழ்களைக் கட்டுப்படுத்த முயல்வர்.

    • கூட்டங்களின் தாக்குதல்
    • சில வேண்டாத செய்திகளால் பாதிப்படையும் கூட்டத்தார் (Mobs) (அரசியல்வாதிகள், குற்றவாளிகள்) இதழ்களைத் தாக்குவது.

புதுப்பிக்கபட்ட நாள் : 03-10-2018 16:36:36(இந்திய நேரம்)