அ) தெய்வ வணக்கம்
-
இரண்டு பொருள்
1) தெய்வத்தை வணங்கும் வணக்கம்
-
இரண்டாம் வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்கத் தொகை.
2) தெய்வத்திற்கு வணங்கும் வணக்கம்
-
மூன்றாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன்தொக்கத் தொகை.
இ) சொல்லிலக்கணம்
-
நான்கு பொருள்
1) சொல்லினது இலக்கணம்
-
ஆறாம் வேற்றுமைத் தொகை
2) சொல்லுக்கு இலக்கணம
-
நான்காம் வேற்றுமைத் தொகை
3) சொல்லின்கண் இலக்கணம்
-
ஏழாம் வேற்றுமைத் தொகை
4) சொல்லினது இலக்கணம்
சொன்ன நூல்
-
அன்மொழித் தொகை
ஈ) பொன்மணி
-
ஐந்து பொருள்
1) பொன்னலாகிய மணி
-
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை (கருவிப் பொருள்)
2) பொன்னாகிய மணி
-
பண்புத் தொகை
3) பொன்னின்கண் மணி
-
ஏழாம் வேற்றுமைத் தொகை
4) பொன்னோடு சேர்ந்த
மணி
-
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை (உடனிகழ்ச்சிப் பொருள்)
5) பொன்னும் மணியும்
-
உம்மைத் தொகை
1) மரத்தைக் காக்கும்
வேலி
-
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை
2) மரத்தாலாகிய வேலி
-
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்
தொகை
3) மரத்திற்கு வேலி
-
நான்காம் வேற்றுமைத் தொகை
4) மரத்தினது வேலி
-
ஆறாம் வேற்றுமைத் தொகை
5) மரத்தின் புறத்தில்
வேலி
-
ஏழாம் வேற்றுமைத் தொகை
6) மரமாகிய வேலி
-
பண்புத் தொகை
(ஊ) சொற்பொருள்
-
ஏழு பொருள்
1) சொல்லால் அறியப்படும் பொருள
-
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும்உடன்தொக்கத் தொகை
2) சொல்லினது பொருள்
-
ஆறாம் வேற்றுமைத் தொகை
3) சொல்லுக்குப் பொருள்
-
நான்காம் வேற்றுமைத் தொகை
4) சொல்லின் கண்
பொருள்
-
ஏழாம் வேற்றுமைத் தொகை
5) சொல்லும் பொருளும்
-
உம்மைத் தொகை
6) சொல்லாகிய பொருள்
-
பண்புத் தொகை
7) சொல்லினது பொருள்
-
எழுவாய்த் தொடர்