தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 2.9 தொகுப்புரை


        இப்பாடம் தொகை என்றால் என்ன என்று விளக்குகிறது.
    தொகைநிலைத் தொடர்கள் வேற்றுமைத் தொகை, வினைத்
    தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத்
    தொகை, அன்மொழித் தொகை என ஆறு வகைப்படும்.
    இவ்வாறு தொகைநிலைத் தொடர்களின் உட்பிரிவுகளையும்
    அவை எப்பொருள்களில் வரும் என்பதையும் இப்பாடம்
    விளக்குகிறது.

             தொகைநிலைத் தொடர்கள் முன்மொழியில் பொருள்
    சிறப்பன, பின்மொழியில் பொருள் சிறப்பன, அனைத்து
    மொழிகளிலும் பொருள் சிறப்பன, புறமொழியில் பொருள்
    சிறப்பன என நான்கு வகைப்படும். இந்நான்கு வகைகளுக்குரிய
    தொகைநிலைத் தொடர்களைப்பற்றியும் இப்பாடம் விளக்குகிறது.

         தொகைநிலைத் தொடர்மொழிகளை விரித்துப் பொருள்
    கொண்டால் இரண்டு முதல் ஏழு பொருள் வரை தரும்
    என்பதையும் இப்பாடம் விளக்குகிறது.

    தன்மதிப்பீடு : வினாக்கள் - II
    1)

    வினைத் தொகை என்றால் என்ன?

    2)
    வினைத் தொகை எக்காலத்தைக் காட்டும்?
    3)
    பண்புத் தொகையில் மறைந்து வரும் உருபு யாது?
    4)
    பண்புகள் யாவை?
    5)
    பண்பி என்றால் என்ன?
    6)
    உவம உருபு சிலவற்றைக் குறிப்பிடுக
    7)
    உம்மைத் தொகையின் தனிச் சிறப்பென்ன?
    8)
    பண்புப் பெயர் இடம் பெறாத பண்புத் தொகை எது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:15:05(இந்திய நேரம்)