Primary tabs
-
2.5 தொகுப்புரை
தமிழ் மொழி வழியாகச் சமண சமயக் கருத்துகளை
மக்களிடம் பரப்பும் முயற்சியில் சமணர்கள் ஈடுபட்டார்கள்.
இதன் பொருட்டுத் தமிழைக் கற்கத் தொடங்கிய அவர்கள் புதிய
இலக்கண நூல்களையும் காப்பிய நூல்களையும் நிகண்டு
நூல்களையும் உருவாக்கினர். பிற சமயத்தார் செய்த தமிழ்ப்
பணியைக் காட்டிலும் இவர்களின் பங்களிப்பு சிறப்புடையதாகும்.
தமிழ் இலக்கியங்களில் பரவலாகச் சமணர்கள் பற்றிய பதிவுகள்
காணக் கிடக்கின்றன; சைவ, சமண சமயங்களுக்கிடையே சமயப்
போர் நிகழ்ந்த வரலாறுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.