Primary tabs
-
P20232 இலக்கியம் காட்டும் சமண சமயம்
தமிழ் மொழியின் வளர்ச்சியில் சமணர்களின் பங்கு
பற்றிக் கூறுகிறது. சமணர்கள் தமிழுக்குச் செய்த
தொண்டுகளைப் பொது நிலையிலும், தமிழ் இலக்கியங்களில்
சமணர்கள் பற்றிய கருத்துகள் இடம் பெற்றுள்ளமையைச்
சிறப்பு நிலையிலும் சான்றுகளுடன் விவரிக்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?- தமிழ் மொழியை வளர்ப்பதில் சமயங்களின் பங்களிப்பு
மகத்தானதாகும். அவ்வகையில் சமண சமயம் தமிழுக்குச்
செய்த அருந்தொண்டுகளை விளங்கிக் கொள்ளலாம். - சமணர்கள் உருவாக்கிய சங்கம் பற்றித் தெரிந்து
கொள்ளலாம். - சமணர்கள் இயற்றிய இலக்கண நூல்கள், காப்பிய
நூல்கள், கீழ்க்கணக்கு நூல்கள், கேசி நூல்கள்,
புராணங்கள் எவை என்பதைப் பற்றிய புரிதல் ஏற்படும். - தமிழ் இலக்கண, இலக்கியங்களில் சமணர்கள் பற்றிய
குறிப்புகளை உணர்ந்து கொள்ளலாம். - சமணர்கள் தமிழுக்குச் செய்த முன்னோடிப் பணிகள்-
அவற்றின் சிறப்புகள் பற்றி அறியலாம்.
- தமிழ் மொழியை வளர்ப்பதில் சமயங்களின் பங்களிப்பு