Primary tabs
-
P20233 சமண சமயப் பிரிவுகளும்
வழிபாட்டு நெறிகளும்
இந்தப் பாடம் சமண சமயப் பிரிவுகள் பற்றியும்,
அவர்தம் வழிபாட்டு நெறிகள் பற்றியும் விளக்குகிறது;
சமணக் கடவுளரின் சின்னங்கள் பற்றியும், இறைச்
செயல்கள் பற்றியும், சமணக் கோயில்கள் - அவற்றில்
நடைபெறும் பூசைகள், திருவிழாக்கள் பற்றியும் விரிவாகக்
கூறுகிறது. சமண சமயப் பெண்கள் பற்றியும் கூறுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?- சமண சமயத்தின் முப்பெரும் பிரிவுகள் பற்றி அறியலாம்.
- சமணர்களின் உயர்ந்த தெய்வங்கள், சிறு தெய்வங்கள்
பற்றித் தெரிந்து கொள்ளலாம். - இறைச் சின்னங்களான சடைமுடி, எருது பற்றிய புரிதல்
ஏற்படும். - சைவக் கடவுள் போலவே சமணக் கடவுளும் எமனை
வென்றார் என்றும் முப்புரத்தை எரித்தார் என்றும்
விளங்கிக் கொள்ளலாம். - சமணக் கோயில்களின் அமைப்பு முறைமை சைவக்
கோயில்களின் அமைப்பு முறைமையோடு
ஒத்துள்ளமையை உணர்ந்து கொள்ளலாம். - சமண விழாக்களில் சிலவற்றை அறிந்து கொள்ளலாம்.
- சமண சமயத்தில் பெண்களின் நிலைப்பாட்டை
விளங்கிக் கொள்ளலாம்.