Primary tabs
-
3.7 தொகுப்புரை
சமண சமயத்தில் சுவேதாம்பர சமணம், திகம்பர சமணம்,
ஸ்தானகவாசி சமணம் என்ற முப்பெரும் பிரிவுகள் உண்டு.
சமணர்களின் அருகக் கடவுள் சிவபெருமானைப் போலவே
சடைமுடியும் எருது வாகனமும் உடையவர். மேலும்
சிவபெருமானைப் போலவே அருகக் கடவுள் எமனை வென்றவர்,
முப்புரம் எரித்தவர். சமணர்களின் முதன்மைத்
தெய்வங்களுக்குரிய சிற்பங்களில் இரண்டு கைகள் மட்டுமே
இருக்கும்; சிறு தெய்வங்களுக்குரிய சிற்பங்களில் இரண்டுக்கு
மேற்பட்ட கைகள் இருக்கும். தீபாவளி, சிவராத்திரி ஆகிய
பண்டிகைகளைச் சமணர்களும் கொண்டாடுகின்றனர். சமணத்தில்
பெண்கள் உயர்ந்த நிலையில் வைத்து மதிக்கப் பெறவில்லை
என்பன போன்ற செய்திகளை இப்பாடத்தின் வழி அறிய
முடிகிறது.