இளையவன் இவனா?
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. நெடுஞ்செழியனின் அவைக்களப் புலவர் யார்?
மாங்குடி மருதனார்
2. கொடுங்கோலன் ஆவேன் - என்று கூறியவர் யார்?
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
3. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இளையவன் என்று இகழ்ந்தவர்கள் யாவர்?
வேந்தர் இருவரும், குறுநில மன்னர்கள் ஐவரும் ஆவர்.
4. மணி போட்டியில் கலந்து கொள்ள விரும்பாமைக்குக் கூறிய காரணம் யாது?
மற்றவர்கள் தன்னைக் கேலி செய்வார்கள் என்பதே காரணம்.
5. வில் போரில் வென்றவன் யார்?
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
6. மூவேந்தர்கள் என்று அழைக்கப் பெறுபவர்கள் யாவர்?
மூவேந்தர்கள் என்று அழைக்கப் பெறுபவர்கள் சேரர், சோழர், பாண்டியர்.
7. நெடுஞ்செழியனைப் பாடிய புலவர்களின் பெயர்களைத் தருக.
இடைக்குன்றூர் கிழார், கல்லாடனார், குடபுலவியனார் ஆகியோர் நெடுஞ்செழியனைப் பாடிய புலவர்கள் ஆவார்கள்.
8. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை எதிர்த்து வந்த எழுவர் யாவர்?
பதினாறுகால் மண்டபத்தில் தமிழ்ப் பள்ளிக்கூடம் நடைபெற்றது.
9. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் வீரம் பற்றி உனது கருத்து என்ன?
இளையவன் இவனா? என வியக்கும் வண்ணம் புலவர்கள் பாடும் வீரம் பெற்றவன்.
10. மணி போன்ற மாணவர்களை எப்படி உருவாக்க வேண்டும்?
மணி போன்ற மாணவர்களை உள்ளத்தில் உறுதி மிக்கவர்களாக உருவாக்க வேண்டும்.